செய்திகள்


சுவிசில் கொறோனா நிலை 23. 03. 2020

Bundes.jpg

சுவிசில் கொறோனா நிலை 23. 03. 2020 கோவிட்-19 என அழைக்கப்படும் கொறோனா உயிர்க்கொல்லி சுவிற்சர்லாந்திலும் லிக்ரென்ஸ்ரைன் எனப்படும் சுவிசின் பாதுகாப்பிற்குட்டப்ட நாட்டிலும் கடந்த நாட்களில் அதிகரித்தே வந்துள்ளது. 23. 03. 2020 சுவிஸ்சுகாதாரத்துறையின் கணக்குப்படி இதுவரை சுவிசிலும் லிக்ரென்ஸ்ரைன் நாட்டிலும் 8060 மக்கள் நோய்த் தொற்றிற்கு ஆளாகி உள்ளார்கள். கொறோனாதொற்றுக்காரணமாக 66 இறப்புக்கள் நேர்ந்துள்ளது. 4வரது இறப்பு கொறோனா காரணமாக நடந்ததா என ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 19. 04. 2020 நடுவன் அரசு அறிவித்த முக்கிய கட்டுப்பாடு, மக்கள் ஒன்று கூடுவது தடைசெய்யப்படுகின்றது எனும் விதியாகும். சுகாதரத்துறை அமைச்சர் திரு. அலான்; பெர்சே இவ் அறிவித்தலை தெரிவித்தபோது குறிப்பிட்ட தகவல்: பல நாடுகள் ஊடரங்கு உத்தரவினை அறிவித்துள்ளார்கள். நாம் அப்படி அறிவிக்காது மக்களை வீடுகளில் இருக்க வேண்டுகின்றோம். சுவிற்சர்லாந்தின் விடுதலை நாளாகக் கொள்ளப்படும் ஆகஸ்ட் முதலாம் திகதி நாம் ஒற்றுமை வலியுறுத்தி உறுதி எடுத்துக் கொள்வது வழமை. அந்த உறுதியை மக்களே தயவு செய்து அரசு சொல்வதைக் கடைப் பிடிப்பதில் காட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். முன்னர்தெரிவித்திருந்த கட்டுப்பாடுகள் அப்படியே தொடர 19. 04. 2020 புதிதாககொறோனாத் தொற்று கட்டுப்படுத்துவதற்காக நடுவன் அரசு மக்கள் மற்றும் அமைப்புக்கள் மீது நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இவை ஆகும்: தலையாய மகுடவாசகம் „மக்களே வீட்டில் இருங்கள்“ என்பதாகும். இன்றியமையாத தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வாருங்கள். இதன் பொருள்: உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு மருத்துவரை காண்பதற்கு அல்லது மருந்தகம் செல்வதற்கு உங்கள் உதவி எவருக்காவது தேவைப்பட்டால் வீட்டில் இருந்து பணி செய்ய முடியாத சூழலில், நேரில் வேலைக்கு செல்ல நேர்ந்தால் உங்களுக்கு வேறு நோய் இருப்பின், மருத்துவரைக் காண்பது தவிர வேறு எதற்கும் வெளியில் செல்லாதீர் 5வருக்கு மேலாக ஒன்றாகக் கூடுவது தடைசெய்யப்படுகின்றது பொது இடங்களில் ஐவருக்கு மேலாக ஒன்று கூடுவது தடைசெய்யப்படுகின்றது. இத்தடை 19. 04. 2020 முதல்நடைமுறைப்படுபத்தப்பட்டு வருகின்றது. இது வாகனத் தரிப்பிடங்களில், பூங்காக்களில் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும்ஒருவருக்கு ஒருவர் குறைந்தது 2 மீற்றர் தூரம் இடைவெளி விட வேண்டும். இப் பொது விதியைக் கடைப்பிடிக்காதவர்கள் தண்டனைப் பணம் 100.—பிராங் வரை செலுத்த நேரிடும். நேரில்தோற்றி கற்க வேண்டிய அனைத்து வகைக் கல்விகளுக்கும் தடை விதிக்கப்படுகின்றது. இத்தடையும் 19. 04. 2020 வரை செல்லும். நிகழ்வுகளும் நிறுவனங்களும் சுவிற்சர்லாந்தின் கூட்டாச்சி நடுவன் அமைச்சர்கள் அனைத்து தனிநபர் மற்றும் பொது நிகழ்வுகளைத் தடைசெய்கின்றனர். விளையாட்டு மற்றும் மன்றங்களின் செயற்பாடுகளும் தடை செய்யப்படுகின்றது. பொதுமக்கள் நேரில் செல்லக்கூடிய நிறுவனங்களும் பூட்டப்பட வேண்டும். இதன்பொருள்: உணவுப்பொருள் அல்லாத கடைகள் அங்காடிகள் உணவகங்கள் நடன-, இரவு மற்றும் உல்லாசவிடுதிகள் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிறுவனங்கள்: அருங்காட்சியகங்கள், நூலகங்கள், திரையரங்குகள், இசைவிழா இல்லங்கள், நாடகசபைகள், சூதாட்ட விடுதி, விளையாட்டு நிலையங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், நீச்சல்தடாகங்கள், உடல்நலநிலையங்கள், பனிச்சறுக்கு நிலையங்கள், தாவரவியல் பூங்கா மற்றும் உயிரியல் பூங்கா, விலங்குகள் பூங்கா, உடல் தீண்டக்கூடிய சேவைகளான: முடிதிருத்து நிலையம், உடலுருவுநடுவம் (மசாஜ்), பச்சைகுத்தும் நிலையங்கள், அழகுக்கலை நிலையங்கள் பூட்டப்பட வேண்டும். இத் தடையில் இருந்து விலக்குப் பெற்றிருக்கும் நிலையங்கள் இவை ஆகும்: நாளாந்த வாழ்விற்கு அடிப்படையான உணவுப் பொருட்கள் விற்கும் கடைகள் (சிறுகடை, எரிபொருள் நிரப்பு நிலையங்கள்) சமைத்த உணவு எடுத்துச் செல்லும் நிலையங்கள் உணவு எடுத்துச் சென்று வழங்கும் நிறுவனங்கள் தங்கு விடுதியில் உள்ளவர்களுக்கு சமைக்கும் உணவகங்கள் மருந்தகங்கள், மருந்து மற்றும் மருத்துவ உதவிப்பொருட்கள் விற்கும் கடைகள் அஞ்சலகம், அஞ்சலக முகவர்கள் தொலைத்தொடர்பு விற்பனை நிலையங்கள் வங்கிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மின்னிரத நிலையங்கள் மற்றும் பொதுப்போக்குவரத்து அமைப்புக்கள் போக்குவரத்து வாகனத்திருத்த நிலையங்கள் சமூகசீர்வளாகங்கள் நெருங்கிய உறவினருடன் இறுதிச் சடங்குகள் தங்குவிடுதிகள் மாநில சட்டத்திற்கு அமைய தொடர்ந்து இயங்கலாம். ஆனால்இவை நடுவன் அரசு அறிவித்திருக்கும் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதுபோல் அறிவிக்கப்பட்டிருக்கும் ஆட்கள் தொகை எண்ணிக்கை மீறாது பார்த்துக் கொள்ளவும் வேண்டும். மக்களுக்கிடையில் போதியளவு இடைவெளிகள் விடப்பட வேண்டும். சுவிற்சர்லாந்து நடுவன் அரசு சுவிஸ் முழுவதும் நடைமுறைப்படுத்தும் இவ்விதிகளில் சூழலிற்கு ஏற்ப கல்வி அல்லது வழங்கல் துறைக்கு விதிவிலக்கினை அளிப்பதற்கு மாநில அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு. இவ்விதிகளும் 19. 04. 2020 முதல்நடைமுறைப்படுதப்பட்டுள்ள கொறோனாத் தடுப்பு செயற்பாடுகள் ஆகும். தொகுப்பு: சிவமகிழி» Related News

Schnell und Einfach

Das Internet ermöglicht es uns Ihre Kredit-Anfrage schnell zu erhalten und zu bearbeiten. Einfach die Kredit-Anfrage Online ausfüllen und abschicken. In 24 Stunden erhalten Sie bereits eine Rückmeldung!

Sicher und Diskret

Das Vertrauen unserer Kunden ist unsere Priorität. Ihre Kredit-Anfrage wird deshalb bei uns sicher und diskret behandelt. Gerne stehen wir Ihnen jederzeit auch für eine persönliche Beratung zur Verfügung.

Kredit ab 7.9%

Wunschbetrag in CHF:

Laufzeit in mt
Monatliche Rate :
7.9%
11.9%


Selliah Selvarajah (Rasan)

Im Rietpark 5
8180 Bülach.ZH
Switzerland
Mob: 079 765 50 57
Tel: 044 860 12 05, 044 860 12 14
Fax: 044 860 12 13

E.Mail:info@multiconsulting.ch
E.Mail:srasan@hotmail.com