செய்திகள்


சுவிசில் 27. 04. 20 முதல் முதற்கட்ட தளர்வு

640x357m.jpg

சுவிஸ் அரசு 26. 04. 2020 பின்னர் எவ்வகையில் கொறோனா தொற்றுப் பேரிடரை கையாளப்போகின்றதுஎன்ற எதிர்பார்ப்புடன்இருக்கும் வேளை 16. 04. 2020 கூடிய ஊடகவியலாளர் சந்திப்பில் நடுவன் அரசு கீழ்க்காணும் முக்கிய அறிவித்தலை விடுத்தது.

அரசின் சுகாதார அதிகாரி திரு. டானியேல் கொக் (Daniel Koch) கருத்து தெரிவிக்கையில் நாம் எதிர்பார்த்தபடி புதிய தொற்று குறைந்துள்ளது, தொற்றுக்காளானோர் நலம் அடைந்துள்ளனர். ஆனால் நடுவன் அரசு தளர்த்தவுள்ள நடைமுறையின் எதிர்மறை பெறுபேற்றினை அளிக்கலாம். ஆகவே படிப் படியாக நாம் தளர்ச்சிகளைச் செய்தாலும் மக்கள் தொடர்ந்தும் தம்மை சுயமாகப் பாதுகாத்துக்கொள்வதுடன் நோய்த்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள உரிய சுகாதார செயல்முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

மருத்துவமனைகள் இயல்பிற்கு திருப்புகின்றன

27. 04. 2020 முதல் மருத்துவ மனைகள் பேரிடர் கால அட்டவணையில் இருந்து விலகி தமது செயற்பாடுகளை வழமைபோல் தொடரலாம். அவசரம் அற்ற நோயாளர்களது அறுவைச்சிகிச்சைகள்முன்னர் கொரோனா நடவடிக்கையால் தள்ளி வைக்கப்பட்டன, 27. 04 முதல்இவர்களது வைத்தியத்தினை மருத்துவமனைகள் தடையின்றித் தொடரலாம். அதுபோல் பல்மருத்துவர், முடநீக்கி இயன் மருத்துவம் (பிசியோதெறப்பி), முடிதிருத்தநிலையம், உருவி நிலையம் (மசாஜ்), அழகுநிலையம் மீண்டும் தொழிற்பட அனுமதிக்கப்படுகின்றது. மரக்கன்று அங்காடிகள், தோட்ட அழகு நடுவங்கள், பூக்கடைகளுக்கும் திறக்க அனுமதி அளிக்கப்படவுள்ளது.

இப்போது உணவுப்பொருட்கள் விற்கப்படும் அங்காடிகளில் உணவு மற்றும் வாழ்வாதாரத்திற்கு அவசியமற்ற பிற பொருட்கள் விற்பதற்கு விதிக்கப்பட்டுள்ளதடைகள் நீக்கப்பட்டு அனைத்துப் பொருட்களையும் 27. 04. 2020 கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு விற்க நடுவன் அரசு அனுமதி அளிக்கின்றது.

பாடசாலைகள் திறக்கப்படும்

29. 04. 2020 மீண்டும் கூடும் சுவிஸ் நடுவன் அரசு சூழல் பொருத்தமாக இருந்து, கொறோனா தொற்று எதிர்பாக்கப்படும் வரையறைக் கட்டிற்குள் இருப்பின் கட்டாயப்பாடசாலைகள் Primarschule,Sekundarschule மற்றும் ஏனைய அனைத்துக் கடைகளும் 11. 05. 2020 திறக்கப்படும். பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்னர் சுவிசின் பொதுப்போக்குவரத்துத் துறை தமது பாதுகாப்பு நடைமுறை அமைவினை முன்னளிக்க வேண்டும் என்றார் சுவிஸ் அதிபர் சிமோனெற்ரா சொமொறுக்கா.. ( Simonetta Sommaruga)

மீளவும் 11. 05. 2020ல் சுவிஸ் அரசு ஒன்று கூடி 08. 06. 2020 முதல் அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களைத் திறக்க ஆவணை செய்யுப்படும்.
அதுபோல் அருங்காட்சியகங்கள், மிருகக்காட்சிச்சாலை, நூலகம் திறப்பது தொடர்பான முடிவு 27. 05. 2020 எட்டப்படும்.
ஏனைய தளர்வுகள் தொடர்பில் சுவிற்சர்லாந்தின்நடுவன் அரசு எந்த முடிவுகளையும் எட்டவில்லை. முதல் இரு நடவடிக்கைகளை அவதானமாக மேற்கொண்டு, சூழல் பொருத்தமாக இருப்பின் ஏனைய கடின நடைமுறைகள் தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்வுநோக்கி படிப்படியாக அடியெடுத்து வைக்கப்படும்.

ஒன்றுகூடத்தடை

5வருக்கு அதிகமாக ஒன்றுகூட நடைமுறையில் உள்ள தடை விலக்கப்படுவது தொடர்பில் எந்த முடிவும் இப்போது அறிவிக்கப்படவில்லை. அதுபோல் விருந்தோம்பல் துறையின் கட்டுப்பாடுகள் தொடர்பான முடிவுகளும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இவை அடுத்துவரும் கால சூழலிற்கு ஏற்ப நடுவன் அரசால் முடிவெடுக்கப்படும்.

எதிர்வரும் காலங்களில் படிநிலையகளில் கடுமையான நடவடிக்கை தளர்த்தப்படும்போதுமுதல் இரண்டு நடவடிக்கைக்குள் உணவங்கள் திறப்பதற்கு அனுமதியோ அல்லது 5வருக்கு மேலாக ஒன்றுகூட உள்ள தடையோ நீக்கப்பட வாய்பில்லை என்றே நோக்கப்படுகிறது.

வருமான இழப்பிற்கு ஈடு

மேலும் சுய தொழில் செய்ய அனுமதி இருந்தும், கொறோனா அசாதராண சூழலால் வருமானத்தை இழந்தவர்களுக்கும் தொழிலிழப்பு ஈடு வழங்க நடுவன் அரசு முடிவு செய்துள்ளது. எடுத்துக்காட்டாக வாடகைக் வாகனம் ஓட அனுமதி இருந்தும் வாடிக்கையாளரை இழந்து நிற்கும் சாரதிகளும் தமது வருமான இழப்பிற்கு ஈடு கோரலாம். ஆகக்கூடிய இழப்பாக ஒருவர் ஒருநாளிற்கு 196 சுவிஸ் பிராங்குகள் கோரலாம். இதன்பொருள் ஒரு மாதத்திற்கு அவர் ஆகக்கூடியது 5880 பிராங்குகள் இழப்பினை ஈடு செய்ய கோரிக்கை விடுக்கலாம்.

படிநிலையாக கட்டுப்பாடுகள் தளர்தப்பட்டாலும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய குழுவினர் என நடுவன் அரசு அறிவித்திருக்கும் மக்கள், அதாவது முன்னர் நோய் ஏற்பட்டு அதன் பக்க விளைவால் தொற்றுக்கு ஆட்படக்கூடியவர்கள், அல்லது இதயத்தில், நுரையீரலில் ஆபத்து உள்ளோர் தொடர்ந்தும் பணிகளில் இருந்தும் சமூகத்திலிருந்தும்விலகியிருக்கவும், தம்மைக் காத்துக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவர்கள் முடிந்தால் வீடுகளில் இருந்து பணியில் தொடரலாம். தொற்று அபாயத்திற்கு ஆட்படக்கூடிய சூழலில் உள்ளோர் நேரில் சென்று பணி செய்வதில் விலக்குப் பெற்றவர் ஆவர். இவர்களுக்கு உரிய காப்பினை நிறுவனம் வழங்க வேண்டும்.

கோடைகாலத்தில் நீந்தலாமா?

வீட்டில் அமைந்துள்ள நீர்த்தடாகத்தில் நீந்துவதற்கோ அல்லது ஆற்றில் தனித்து நீந்துவதற்கோ இப்போது எத் தடையும் இல்லை என்றார் திரு. டானியேல் கொக், (Daniel Koch)ஆனால் பொது நீச்சல் தடாகங்கள் எப்போது திறக்கப்படும் என்பதை இப்போது சொல்ல முயாது என்றார் சுவிஸ் அதிபர் திருமதி சிமோனெற்ரா சொமொறுக்கா. ( Simonetta Sommaruga)

கட்டாயம் மருத்துவ முகமூடி அணிய வேண்டுமா?

தளர்த்தப்படும் நடைமுறைகள் மேலதிக பாதுகாப்பு அமைவுகளுடன் நடைமுறைக்கு வரும். துறைக்கு ஏற்ப முகமூடி அணிதல் கட்டாயமாக்கப்படலாம்.
மருத்துவ முகமூடிகள் சில துறைகளுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டாலும் கட்டணமற்று அரசால் கொடையாக அளிக்கப்படாது என்றார் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே( Alain Berset). இப்போது உள்ள சூழலில் மருத்துவ முகமூடிகள் மக்கள் பெறுவதில் கடினம் உண்டு. அடுத்த கட்டங்களில் கடைகளில் பெறுவதற்கு வாய்ப்பு அதிகரிக்கும். அனைவரும் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை. துறைக்கேற்ப அணியவேண்டி இருக்கும் என்றார்.

தொகுப்பு: சிவமகிழி» Related News

Schnell und Einfach

Das Internet ermöglicht es uns Ihre Kredit-Anfrage schnell zu erhalten und zu bearbeiten. Einfach die Kredit-Anfrage Online ausfüllen und abschicken. In 24 Stunden erhalten Sie bereits eine Rückmeldung!

Sicher und Diskret

Das Vertrauen unserer Kunden ist unsere Priorität. Ihre Kredit-Anfrage wird deshalb bei uns sicher und diskret behandelt. Gerne stehen wir Ihnen jederzeit auch für eine persönliche Beratung zur Verfügung.

Kredit ab 7.9%

Wunschbetrag in CHF:

Laufzeit in mt
Monatliche Rate :
7.9%
11.9%


Selliah Selvarajah (Rasan)

Im Rietpark 5
8180 Bülach.ZH
Switzerland
Mob: 079 765 50 57
Tel: 044 860 12 05, 044 860 12 14
Fax: 044 860 12 13

E.Mail:info@multiconsulting.ch
E.Mail:srasan@hotmail.com