செய்திகள்


சுவிசில் எதிர்பாராத தளர்வுகள்

640x357m.jpg

சுவிசில் எதிர்பாராத தளர்வுகள் 29. 04. 2020 புதன்கிழமை சுவிற்சர்லாந்தின் கூட்டாச்சி நடுவனரசு ஒன்றுகூடி 11. 05. 2020 முதல்திட்டமிட்டதைவிட அதிக நடவடிக்கைகளில் தளர்ச்சிகளை முன்னெடுக்க உள்ளதை தெரிவித்துள்ளது.

இதன்படி கடைகள், உணவகங்கள், சந்தைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள், ஆரம்பப்பாடசாலை மற்றும் இடைநிலைப்பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

மேலும் இதுவரை துறைசார் வீரர்கள் விளையாட்டுப் பயிற்சிகளை முன்னெடுக்க விடுக்கப்பட்ட தடையும் நீக்கப்படுகின்றது.

மேற்காணும் தடைகள் நீக்கப்பட்டு தளர்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டபோதும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் கைக்கொள்ளவும், உணவகங்;களில் ஆகக்கூடியது ஒரு மேசைக்கு நால்வர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அமரும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

உணவகங்களில் வாடிக்கையாளர்கள் கட்டாயம் உட்கார்ந்து இருக்க வேண்டும் எனவும் குழுக்களுக்கிடையில் இடைவெளிகள் பேணப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

11. 05. 2020 முதல் உணவகங்கள் திறப்பினும் அனைவராலும் முழுமையாக அனைவருக்கும் பணி வழங்கி இயங்க முடியாது இருப்பின், அவர்கள் தொடர்ந்தும் சுவிஸ் அரசு அறிவித்திருக்கும் குறைந்தநேரப் பணித் திட்டத்தில் விண்ணப்பித்து, மிகுதிநேரத்திற்கு பொருள் ஈடு பெறலாம் என்றார் சுவிஸ் அரசின் பொருளாதாரத்துறை அதிகாரி திரு. போறிஸ் சூர்கெர். (Boris Zürcher)

11. 05. 2020 முதல் 08. 06. 2020 வரை புதிய அறிவிப்புக்களோ அல்லது தளர்வு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படாது. இக்காலத்தில் தொற்றித் தாக்கத்தினைப் பொறுத்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார் சுவிசின் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே. (Alain Berset)

நீங்கள் தளர்த்தி இருக்கும் இந் நடவடிக்கைகள் மீளவும் இறுக்கப்படுமா எனும் கேள்வி ஊடகவியலாளர் ஒருவரால் விடுக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் அலான் பெர்சே. (Alain Berset): «இதற்குப் பதில் அளிப்பது கடினம்» நாம் முன்னெடுக்கும் முயற்சிகளும் செயல்களும் சுவிசின் மருத்துவமனைகள் தமது வலுவை இழக்காமல் இருக்க வைப்பதற்கான மூலோபாயம் ஆகும். இதனை நோய்த்தொற்றின் போக்கே தீர்மானிக்கும் என்றார்.

1.9 பில்லியன் கடனளிப்பு

கடந்த நாட்களில் உலகில் பல் பொருளாதாரத் துறைகளும் கொறோனாவின் பரவலால் பெரும் ஆட்டம் கண்டுள்ளன. உலகின் இயல்பு வாழ்வினை இப்பெரும் தொற்றுப் பேரிடர் முழுமையாக முடக்கி விட்டது. இதில் சுவிற்சர்லாந்தின் விமானசேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

1931ம் ஆண்டு மார்ச் மாதம் நிறுவப்பட்ட சுவிசின் பொது விமானப் போக்குவரத்துச் சேவையான சுவிஸ் ஏர் 2002 ம் ஆண்டு மார்ச் மாதம் பெரும் நட்டத்தால் கலைக்கப்பட்டது. அப்போது உள்ளூர் விமான சேவையாக இருந்த குறோஸ் ஏர் நிறுவனத்துடன் இணைந்து மிகுதமிருந்த சுவிஸ் ஏர் வழங்களை இணைத்து சுவிஸ் எனும் புதிய நிறுவனம் நிறுவப்பட்டது. இது பின்னர் யேர்மன் விமானப் போக்குவரத்து நிறுவனமான லுவ்ற்கன்சாவின் Lufthansa ஓர் கிளைநிறுவனமானது. சுவிஸ் இதுவரை இலாபகரமாக இயங்கி வந்தாலும் கொறோனா சுவிஸ் விமான நிறுவனத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது.

இன்று பெரும் நி;தி நெருக்கடியில் சுவிஸ் விமான நிறுவனம் தவிக்கும்வேளை சுவிஸ் அரசு 1.9 பில்லியன் சுவிஸ்பிராங்குகளை ஏடெல் வைஸ் மற்றும் சுவிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கடனளிக்க உத்தரவாதப் பத்திரத்தினை வழங்க முன்வந்துள்ளது. இக்கடனளிப்பிற்கு சுவிஸ்சர்லாந்தின் பாராளுமன்றம் அனுமதி அளிக்க வேண்டி உள்ளது. கடன் பெறும் நிறுவனங்கள் கடன் இருக்கும் வரை விமான நிறுவனப் பங்கு வைத்திருப்போருக்கு இலாபத்தில் பங்கு அளிக்கக்கூடாது என்றும் சுவிசிலிருந்து நடைபெறும் போக்குவரத்திற்கு மட்டுமே இக்கடனின் வழங்கள் பயன்படவேண்டும் என்றும் மேலும் சில கடுமையான நிபந்தனைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது என்றார் சுவிஸ் அதிபர் திருமதி. சொமொறுக்கா. (simonetta sommaruga)

மேலும் சுவிஸ் அதிபர் பேசுகையில் ஏடெல் வைஸ் மற்றும் சுவிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் சுவிஸ் அரசு ஈசியெற் (easyJet) நிறுவத்திற்கு கடன் வழங்கப்படவில்லை என்றார்.

பிரெஞ்மொழி பேசுகின்ற சுவிசின் பகுதிகளுக்கு ஈசியெற்றின் (easyJet) சேவை அவசியமானதால், சுவிஸ் அரசு ஈசியெற் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. ஈசியெற் தனது சொந்த நிதியைக்கொண்டு இவ்விடர்காலத்தை கடக்க வலுக்கொண்ட நிறுவனமாக இருப்பதால் இம்முடிவினை தாம் கூட்டாக எட்டியதாகத் தெரிவித்தார்.

பொதுப்போக்குவரத்து இயல்பிற்கு திரும்புகின்றது

11. 05. 2020 முதல் சுவிற்சர்லாந்து முழுவதும் வழமையான பொதுப்போக்குவரத்து அட்டவணை வழமைக்குத் திரும்புகின்றது. கடந்த மார்ச் முதல் அமுலில் உள்ள இறுக்கம் தளர்த்தப்பட்டு வழமையான நேர அட்டவணையின்படி அனைத்துப் போக்குவரத்தும் இருக்கும் அதேவேளை புதிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறையினை கடைப்பிடிக்க வேண்டப்பட்டுள்ளது.

அனைவரும் பொது இடங்களில் எப்போதும் முகவுறை அணிய வேண்டும் எனும் கட்டளையினை சுவிஸ் அரசு வெளியிடாது என்றார் சுவிஸ் அதிபர் சொமறூக்கா. (sommaruga) மேலும் நடுவன் அரசின் சிறப்பு அதிகாரியான திரு. டனியேல் கொக் (Daniel koch) அவர்கள், குழந்தைகள் சுகாதார முகவுறையினை அமைதியாக அணியும் பக்குவம் கொண்டிருப்பின் மட்டுமே அதனை அணியவேண்டும் என்றார்.

பொதுத்தேர்வுகள்

உயர்கல்விப் பெறுபேறுகள் இவ்வாண்டு கடந்த கால அனுபவத்தைக் கொண்டு வழங்க நடுவன் அரசு அனுமதி அளிக்கின்றது. மாநிலங்கள் எழுத்துப் பரீட்சை நடத்துவது தொடர்பில் முடிவெடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள் இருப்பினும் பாதுகாப்பு நடைமுறைகளும் தொடரப்படும்

இடைவெளி பேணுதல், முகவுறை, கைகழுவுவது, உயிர்க்கொல்லி நீக்கம், என்பன தொடரப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றது.

பொருளாதாரம் மீளுமா?

பொருளாதார அமைச்சர் திரு. பார்மெலின் ( Parmelin) கருத்து தெரிவிக்கையில்: சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கை மிக முக்கியம் என்றார். மக்கள் அரசு மற்றும் மருத்துவ நிபுணர்கள் முன்மொழியும் பாதுகாப்பு நடவடிக்கையினை முழுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே நாம் மெல்ல மெல்ல பொருளாதார ரீதியாகவும் இயல்பிற்கு திரும்ப முடியும் என்றார். சுவிற்சர்லாந்தின் நிறுவனங்கள் அனைத்தும் அரசு அறிவித்துள்ள செயல்முறைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பர் என்று தாம் நம்புவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இப்போது சுவிசில் 3.3 வீதம் வேலை இல்லாதோர் தொகை ஆகும். இப்போது நிலவும் தொற்றுக் காலம் மேலும் இவ் வீதத்தினை அதிகரிக்கச் செய்யலாம். நிறுவனங்கள் நிலைத்திருக்கவும் தொழில்கள் காக்கப்படவும் சுவிஸ் அரசு பல நடடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் அலான் பெர்சே ( Alain Berset ) தெரிவிக்கையில் நாம் இவ்வுயிர்க்கொல்லியுடன் நீண்ட காலம் வாழ வேண்டியிருக்கும் என்றார். «Wir werden noch länger mit dem Virus leben müssen.» அனைத்து தடைகளும் நீங்கும் வரை இவர் வாய்மொழி தொடரவேண்டி இருக்கும்.

5வருக்கு மேலாக ஒன்றுகூடத் தடை விலகுமா?

கொறோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்த சுவிசில் ஐவருக்கு மேலாக ஒன்றுகூடுவது 16. 03. 2020 முதல்தடைசெய்யப்பட்டுள்ளது. இத்தடை பொது இடங்களுக்கும், நடந்து உலாச் செல்வதற்கும் பூங்காக்களில் கூடுவதற்கும் பொருந்தும். ஐவருக்கு உட்பட்டு அல்லது ஐவருக்கு குறைவாக கூடினாலும் இரண்டு மீற்ரர் இடைவெளி விட வேண்டும் என்றும், சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனைக் கடைப்பிடிக்காதோர் 100 சுவிஸ் பிராங் குற்றப் பணத்தினை தண்டனையாக செலுத்த வேண்டி வரும் எனவும் இன்றுவரை நடைமுறை உள்ளது. இத்தடை 08. 06. 2020 வரை நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1000 மனிதர்களுக்கு மேலாக ஒன்றுகூடுவதற்கு தடையினை 31. 08. 2020 வரை பொறுத்திருந்து கண்காணித்து நடுவன் அரசு முடிவெடுக்கும் என்றும் சுவிற்சர்லாந்தின் சுகாதாரத்துறை இணையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது: Veranstaltungen von 1000 oder mehr Personen sind bis am 31. August verboten. Vor den Sommerferien beurteilt der Bundesrat die Situation erneut und entscheidet über eine mögliche Verlängerung dieser Massnahme.

சுவிஸ் நடுவனரசின் சுகாதரத்துறை இணையப்பக்கம்: https://www.bag.admin.ch

11. 05. 2020 முதல் தளர்வடையும் நடவடிக்கைகள் சுருக்கமாக: • கட்டாயப்பாடசாலைகள் (முதல் நிலை மற்றும் இடைநிலை) திறக்கப்படுகின்றன
• நேரில் தோன்றும் நிகழ்வுகள், இரண்டாம் நிலைப் பள்ளிகளில் ஆகக்கூடியது ஐவர். இது வாகனசாரதி பயிற்சி நிலையங்களுக்கும், மொழி வகுப்புக்களுக்கும் பொருந்தும்
• கற்கை நிலையங்களில் பரீட்சைகள் • கடைகள் மற்றும் அங்காடிகள் • பயண முகவர்கள் • அருங்காட்சியங்கள், நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள் (கேட்போர்கூடம் தவிர்த்து) • உடல் தீண்டா விளையாட்டுக்கள் (தனியாக அல்லது குழுவாக ஆகக்கூடியது ஐவர் இணைந்து, விளையாட்டிற்கு தேவையான திடலையும் கருவிகளையும் பயன்படுத்தலாம். • துறைசார் தேசிய விiயாட்டுத் திறனாளர்கள் தம் குழுவுடன் ஆகக்கூடியது ஐவர் அல்லது தனித்து, உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து. • குழுவில் - கூட்டிணைவு (லீக்) துறைசார் விளையாட்டு வீரர்கள் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து.

• உணவகங்களில் ஆகக்கூடியது நால்வர் ஒன்றாக உணவருந்தலாம் (மற்றும் குடும்பம், குழந்தைகளுடன்) 08. 06. 2020 முதல் இந்நடவடிக்கைகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது, இதன் முடிவு சுவிசின் கூட்டாச்சி நடுவன் அரசு 27. 05. 2020 ஒன்றுகூடி அறிவிக்கும்போதே உறுதிப்படுத்தப்படும்.

• இரண்டாம் நிலைக்கு மேற்பட்ட பாடசாலைகள், உயர் கல்வி நிலையங்கள், ஏனைய கற்கையகங்கள் • உயிரியல் பூங்கா, தாவரவியல் தோட்டங்கள், மிருகக்காட்சிப்பூங்கா • நீச்சல் தடாகங்கள் • ஐவருக்கு மேல் ஒன்றுகூட அனுமதி


தொகுப்பு: சிவமகிழி» Related News

Schnell und Einfach

Das Internet ermöglicht es uns Ihre Kredit-Anfrage schnell zu erhalten und zu bearbeiten. Einfach die Kredit-Anfrage Online ausfüllen und abschicken. In 24 Stunden erhalten Sie bereits eine Rückmeldung!

Sicher und Diskret

Das Vertrauen unserer Kunden ist unsere Priorität. Ihre Kredit-Anfrage wird deshalb bei uns sicher und diskret behandelt. Gerne stehen wir Ihnen jederzeit auch für eine persönliche Beratung zur Verfügung.

Kredit ab 7.9%

Wunschbetrag in CHF:

Laufzeit in mt
Monatliche Rate :
7.9%
11.9%


Selliah Selvarajah (Rasan)

Im Rietpark 5
8180 Bülach.ZH
Switzerland
Mob: 079 765 50 57
Tel: 044 860 12 05, 044 860 12 14
Fax: 044 860 12 13

E.Mail:info@multiconsulting.ch
E.Mail:srasan@hotmail.com