ஆயுள் காப்புறுதி

ஆயுள் காப்புறுதி

 

ஒவ்வொரு குடும்பத்தலைவனும் இக்காப்புறதியை செய்து வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். புலம்பெயர் நாட்டில் எம்மவர்கள் இக்காப்புறுதி பற்றிய தெளிவின்மையும் நம்பிக்கையின்மையும் எதிர்காலத்தில்
தங்கள் வாழ்கைக்கு இக்காப்புறுதி தரும் நன்மையை அறியாமலும் இருப்பதால்
அநேகமானோர் இக்காப்புதியை செய்துகொள்ள விருப்பமற்று இருக்கிறார்கள்.

உங்கள்  எதிர்கால பாதுகாப்பிற்காக

1 Säule  AHV

2 Säule  BVG

3 Säule  Leben Versicherung  இவை மூன்றும் அவசியமானவை

 

ஆயுற்காப்புறதியை செய்துவைதிதிருக்கும் ஒருவருக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டாலோ அல்லது உடல் அங்கவீனம் ஏற்பட்டாலோ(IV) உங்கள் காப்புறுதி நிறுவனம் உங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிபடையில் அதன் முழப்பலனையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக ஒருவர் 50ஆயிரம் பிராங் தொகைக்கு காப்புறுதி செய்திருந்தால் காப்புறதியாளருக்கு உயிர் ஆபத்து ஏற்படின் அவரின் மனைவி பிள்ளைகளுக்கு அப்பணம் சென்றடையும். அல்லது உடல் அங்கவீனம் ஏற்படின் நீங்கள் ஒப்பந்தம் செய்திருக்கும் காலம் வரை (3 அல்லது 6 மாதங்களுக்கு  பின்) மாதாந்த கட்டுப்பணத்தை அந்த நிறுவனமே பொறுப்பேற்றுக்கொள்ளும் ஒப்பந்தம் முடியும் காலப்பகுதியில் அத்தொகையை அந்நிறுவனம் உங்களிடம் கையளிக்கும்.

இது தொடர்பான பயிற்சிப்பட்டறைகளையம் கற்கை நெறிகளையும் செய்து கொண்ட நாம் மேலதிக தகவல்களை தமிழில் விளக்கமாக தருவதற்கு ஆர்வமாகவுள்ளோம். இது சம்பந்தமான ஆலோசனைகளுக்கு அழையுங்கள்.