சுவிஸ் செய்திகள்


ஒரு லட்சம் மின்னல்கள் சுவிற்சர்லாந்தைத் தாக்கின

Blitz.jpg

ஒரு லட்சம் மின்னல்கள் சுவிற்சர்லாந்தைத் தாக்கின கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவுவரை ஒரு லட்சம் மின்னல்கள் சுவிற்சர்லாந்தைத் தாக்கின. இன்ரெர்லாக்கென் எனும் இடத்தில் கூடுதல் மழையாக 66 மில்லிலீற்ரர் அளவிடப்பட்டுள்ளது. பிறைபூர்க் மற்றும் சாப்கவுசன் நகரிலும் அதிக மழை பொழிந்திருந்தது. அதிகம் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியாக வல்லென்சே கருதப்படுகிறது. செங்காளன் மாநிலத்தில் சம்மென்பாக் வாவி கரைபுரண்டு ஓடி வீதிகளையும் பயனற்றதாக்கி உள்ளது. சுவிசின் பல மலைப்பகுதியிலும் மண்சரிவும் ஏற்பட்டு மழை பெரு மாற்றத்தை அளித்துள்ளது. பேர்ன் மாநிலத்தில் 140 இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. வீதிகள் சில பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. தூண் நெடுவீதி காலை 08.30 மணிக்கு மூடப்பட்டது. பேர்ன் ஆகுவா எனும் நீச்சல் பொழுதுபோக்குப் பூங்கா மின்னாசரத்தடங்கலுக்கு உட்பட்டு பணி இடை நிறுத்தப்பட்டது. ஆனால் மீண்டும் 30 பாகையைத் தொட்ட கோடைக் கால நிலை தலைதூக்கிப்பார்க்கிறது. சுவிஸ் மக்களின் முதுமொழிகளுக்குப் பொருள் இல்லாமல் காலப் பருவ நிலை எவர் கணிப்பையும் பொய்யாக்கி தன் விருப்பப்படி மாறிவருகிறது என்பதை காலநிலை ஆய்வாளர்கள் முதல் அனுபவமுள்ள சுவிஸ் விவசாயிகள் வரை உணர்ந்து வருகிறார்கள். பூமி வெப்பமாவதன் பயன் இதுவோ என்ற ஐயத்தையும் இது ஏற்படுத்துகிறது.



» Related News

Schnell und Einfach

Das Internet ermöglicht es uns Ihre Kredit-Anfrage schnell zu erhalten und zu bearbeiten. Einfach die Kredit-Anfrage Online ausfüllen und abschicken. In 24 Stunden erhalten Sie bereits eine Rückmeldung!

Sicher und Diskret

Das Vertrauen unserer Kunden ist unsere Priorität. Ihre Kredit-Anfrage wird deshalb bei uns sicher und diskret behandelt. Gerne stehen wir Ihnen jederzeit auch für eine persönliche Beratung zur Verfügung.

Kredit ab 7.9%

Wunschbetrag in CHF:

Laufzeit in mt
Monatliche Rate :
7.9%
11.9%


Selliah Selvarajah (Rasan)

Im Rietpark 5
8180 Bülach.ZH
Switzerland
Mob: 079 765 50 57
Tel: 044 860 12 05, 044 860 12 14
Fax: 044 860 12 13

E.Mail:info@multiconsulting.ch
E.Mail:srasan@hotmail.com