சுவிஸ் செய்திகள்


சுவிசில் கொறோனாத் தடுப்பு நடவடிக்கைகள் நீடிக்கப்படுகின்றது

index.jpg

கொறோனா பெருந்தொற்றினைத் தவிர்ப்பதற்காக பேரிடர் நடவடிக்கையினை கடந்த 13. 03. 2020 முதல் அமுல்படுத்தியிருந்தது. 21. 03. 2020 முதல் வாழ்வாதரத்திற்கு தேவையான கடைகள் மற்றும் தொற்றுத் தவிர்க்க கூடிய தொழில்கள் தவிர ஏனைய அனைத்து செயற்பாடுகளும் வரையறுக்கப்பட்டு சுதந்திரமாக மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவதற்கு எதிராக தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந் நடவடிக்கைகள் 19. 04. 2020 வரை செல்லுபடியாகும் என முன்னர் சுவிற்சர்லாந்தின் நடுவன் அரசு அறிவித்திருந்தது. சுவிற்சர்லாந்தின் நடுவனரசு 08. 04. 2020 புதன்கிழமை மாலை ஊடகசந்திப்பில் தாம் முன்னர் அமுல்படுத்திய நடவடிக்கையினை எதிர்வரும் 26. 04. 2020 வரை நீடிப்பதாகத் தெரிவித்தது.

இருந்தபோதும் ஏப்பிரல் 2020 இற்குள் சில முடக்க நடவடிக்கைகளைத் தாம் இழக்க வாய்ப்புள்ளது எனவும் நடுவனரசு அறிவத்தது. நோய்த்தொற்று மற்றும் பாதுகாப்பு செயல் நடவடிக்கைகள் அதுபோல் மக்களிடையில் இடைவெளிபேணும் நலன் பேணும் நடைமுறை தொடர்ந்து பேணப்படும் எனவும் சுகாதரா அமைச்சர் திரு. அலான் பேர்சே தெரிவித்தார். மேலும் அவர் இப்போது உள்ள அனைத்து நடைமுறைகளும் உடனடியாக தளர்த்தப்படாதபோதும் மெதுமெதுவாக ஒவ்வொரு நடவடிக்கையாக நடைமுறையில் உள்ள முடக்கம் இழக்கப்பட்டு இயல்பு வாழ்விற்கு சுவிற்சர்லாந்து படிப்படியாக திரும்பும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வழி சரி, இலக்கு அடையவில்லை!

சுவிற்சர்லாந்தின் அதிபர் திருமதி. சிமோனெற்ரா சமறுக்கா கருத்து தெரிவிக்கையில் «நாம் இப்போது தொடரும் வழி சரியாக உள்ளது, ஆனால் எமது அடைவு இலக்கினை இன்னும் நாம் அடையவில்லை» என்று உரைத்தார். ஆகவே கொறோனா நோய்த் தொற்றினை முடக்கும் சுவிற்சர்லாந்தின் நடவடிக்கைகள் 26. 04. 2020 வரை நீடிக்க அரசு ஆணைபிறப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை சுவிஸ் நடுவனரசு 16. 04. 2020 கூடும்போது நோய்த்தொற்றினை கட்டுப்படுத்திக்கொண்டு, மக்கள் உடல் நலனைப் பேணிக்கொண்டு இயல்பு வாழ்வு நோக்கி சுவிற்சர்லாந்து செல்லக்கூடிய வழிகளை ஆய்ந்து, இப்போது நிலவும் இறுக்கத்திலிருந்து இளக்கத்திற்கு வழியினைத் தேடும் எனவும் சுவிஸ் அதிபர் தெரிவித்தார்.

சிறு ஒளி தெரிகிறது

நீண்ட குகையின் முடிவில் ஒரு ஒளி தெரிகிறது என்று பேசத் தொடங்கிய சுவிற்சர்லாந்தின் சுகாதாரத்துறை அமைச்சரான திரு. அலான் பேர்சே தொடர்ந்து பேசுகையில் «நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலன் இன்று நான்கு வாரங்களுக்குப் பின்னர் உடையக்கூடிய ஒரு சமன்பாட்டினை அளித்துள்ளது» இக்காலத்தில் நாம் மக்களிடையில் இடைவெளிகளைப் பேணவேண்டும் அதுபோல் நோய்த்தொற்றினைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தொடரவும் வேண்டும் என்றார்.

இப்போது நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளை இளக்கப்படுத்துவதற்கான அளவுகோளா நோக்கப்படுவது இவை ஆகும்: • புதிதாக தொற்றுக்கு உட்பட் நோயாளர் தொகை • மருத்துவமனையின் வழிமுறை அறிவித்தல்கள் • நோயால் இறந்தோர் தொகை

மேலே குறிப்பிட்ட அளவுகோளைக்கொண்டு எந்த நிரல் அடிப்படையில் நடவடிக்கைகளை இழக்கலாம் என ஆராயப்படும். இவ்வேளை நோய்த் தொற்றிற்கு ஆளாகக்கூடிய அபாயம் உள்ள மக்கள் குழு மற்றும் சுவிஸ் அரசின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய மக்களின் மனநிலை என்பனவும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

ஒவ்வொரு கட்டங்களையும் நாம் கடக்க குறைந்தது நான்கு வாரங்கள் ஆகலாம். ஆனால் எமது செயல் விசையினை தீர்மானிப்பதும் ஆணையிடுவதும் தொற்றுநோய் பரவலின் வேகத்தில்தான் தங்கியுள்ளது. «நாம் அனைவரும் இணைந்து பல் இலக்குகளை இன்று அடைந்துள்ளோம்». ஆனால் நாம் இப்போது இப்பந்தினைத் தவறவிடாமல் தொடர்ந்து கையாள வேண்டும் என்று அலான் பேர்சே தெரிவித்தார்.



தொகுப்பு: சிவமகிழி



» Related News

Schnell und Einfach

Das Internet ermöglicht es uns Ihre Kredit-Anfrage schnell zu erhalten und zu bearbeiten. Einfach die Kredit-Anfrage Online ausfüllen und abschicken. In 24 Stunden erhalten Sie bereits eine Rückmeldung!

Sicher und Diskret

Das Vertrauen unserer Kunden ist unsere Priorität. Ihre Kredit-Anfrage wird deshalb bei uns sicher und diskret behandelt. Gerne stehen wir Ihnen jederzeit auch für eine persönliche Beratung zur Verfügung.

Kredit ab 7.9%

Wunschbetrag in CHF:

Laufzeit in mt
Monatliche Rate :
7.9%
11.9%


Selliah Selvarajah (Rasan)

Im Rietpark 5
8180 Bülach.ZH
Switzerland
Mob: 079 765 50 57
Tel: 044 860 12 05, 044 860 12 14
Fax: 044 860 12 13

E.Mail:info@multiconsulting.ch
E.Mail:srasan@hotmail.com