சுவிஸ் செய்திகள்


Gotthard Tunnel

Gotthard Tunnel.jpg

Gotthard Tunnel 1882ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட கொற்கார்ட் தொடருந்து சேவை (Gotthardbahn) இன்று 134 ஆண்டுகளுக்குப்பிறகு புதுமையுடன் புதுச் சுருங்கப்பாதையுடன் புதிதாக மிளிர்கின்றது. கடந்த 01. 06. 2016 உலகத்தின் நீண்ட தொடருந்துச் சுரங்கப்பாதை ஐரோப்பாவின் நாட்டுத்தலைவர்கள் புடை சூழ சுவிஸ் அரசால் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வு உலக ஊடகங்களில் பெரும் பதிவை அளித்துள்ளது.மேலும் ஐரோப்பாக் கண்டத்தில் சிறிய நாடு நாட்டிய சாதனையினை யாவரும் பாராட்டி வருகிறார்கள்.

சுவிசின் யேர்மன் மொழி பேசும் ஊரி மாநிலத்தில் அமைந்துள்ள எர்ஸ்ற் பெல்ட் எனும் ஊரையும் இத்தாலி மொழிபேசும் ரிச்சீனோ மாநிலத்தில் அமைந்துள்ள போடியோ எனும் ஊரையும் இணைக்கும் இந்தச் சுரங்கப்பாதை 57 கிலோமீட்டர் நீளமுடையதாகும். தென் மற்றும் வடநுழைவாசல் இணைப்பாக இதனை ஐரோப்பிய நாட்டவர்கள் அடையாளப்படுத்துவர்.

11. 12. 2016ம் திகதி முதல் இக்குகை ஊடாக சுவிஸ் தொடருந்துச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இப்போது சூரிச்சில் இருந்து மிலானோ செல்வதற்கு 3 மணிநேரம் 40 நிமிடங்கள் தேவைப்படும். புதிய சுருங்கப்பாதை 1 மணிநேரத்தைக் குறைக்கிறது. இதுவரை பாவனையில் உள்ள சுரங்கவழிப்பாதையால் சரக்குகள் ஏற்றும் தொடருந்துகள் ஆகக்கூடியது 1400 தொன் எடையுள்ள பொருட்களையே ஒரே முறையில் எடுத்துச் செல்லலாம். ஆனால் புதிய பாதை ஊடாக 4000 தொன் பழுவினை நகர்த்த முடியும்.

1947ல் அறிமுகப்படுத்தப்பட்ட அடிப்படைத்திட்டம் 1963ம் ஆண்டு அப்போதைய அரசால் ஆய்விற்கு உட்டுபடுத்தப்பட்டது. 1983ல் இத்திட்டம் அடிப்படைத் தேவையானது அல்ல மாறாக ஒரு விருப்புத் தேர்வு எனக் கொள்ளப்பட்டது. டிசம்பர் 1988ல் மீண்டும் இத்திட்டம் தூசி தட்டி எடுக்கப்பட்டது. அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த திரு. அடோல்வ் ஓகி Adolf Ogi அவர்களது முயற்சியால் மக்கள் வாக்கெடுப்பிற்கு இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. 1989 ,1991 ,1992 ஆண்டுகளில் மக்கள் ஆணை பெற்று திட்ட வரைவு உருவாக்கப்பட்டது.

04. 02. 1999 முதலாவது பாறை இத்திட்டத்திற்காக தகர்க்கப்பட்டது. பெப்பிரவரி 2007 துளையிடும் இயந்திரம் இயக்கப்பட்டு பணிகள் தொடரப்பட்டது. 2013 மற்றும் 2014ம் ஆண்டுக் கால்பகுதியில் தொழில்நுட்டக் கோளாறு மற்றும் புதிய யுத்திகள் கையாள்வதற்கான திட்டப்பணிகாரணமாக பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் மீண்டும் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. 2வருட பணிஇடைவெளி இருந்தபோதும், பணி முடிவடையு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் சுரங்கம் அமைக்கும் பணி முடிவடைந்த செயலை ஐரோப்பிய நாடுகள் வெகுவாகப் பாரட்டி வருகின்றன. இப்பணிக்கு 2012வரை 700 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவிடப்பட்டன. சுரங்கள் தோண்டும் பணிக்கு 2400 பணியாளர்கள் 17 வருடங்களூக மூன்று நேரத் தவணை முறையில் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தமாக 28.2 மில்லியன் தொன் மண் மற்றும் கற்கள் இச்சுரங்கக்குகையில் இருந்து இதுவரை வெளியெற்றப்பட்டுள்ளது.

இப்பெரும் பணியில் உயர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இத்திட்டதிற்காகவே கல கருவிகளும் இயந்திரங்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன.

சுரங்கப்பணியில் ஏற்பட்ட விபத்தில 9 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்
திகதி. தொகை விபத்திற்கான காரணம்
8. 06. 2000 1 இரும்புக் கம்பி தாக்கி
12. 03. 2001 1 வெடியால் தகர்க்கப்பட்ட மண் மூடியதால்
3. 04. 2003 1 nரிய கல் உறுண்டு விழுந்து
11. 09. 2003 1 பெரும் மின்கம்பி வடம் தவறி விழுந்து
21. 01. 2005 2 குகையில் தோண்டப்பட்ட மண்ணை எடுத்துச் சென்ற வண்டி தவறுதலாக இன்னொரு வண்டியுடன் இடி உண்டு
23. 11. 2006 1 கற்சுரளை வண்டி மோதுண்டு
24. 06. 2010 1 வண்டி மோதுண்டு
16. 06. 2012 1 சாரளக்கட்டு விழுந்து

சுரங்கப்பாதையின் செயற்திட்டம்
பயணிகள் தொடருந்து ஒருமணிநேரத்திற்கு 200 – 250 கிலோ மீற்ரர் வேகத்தில் கடக்கலாம். சரக்குத் தொடருந்துகள் 100 – 160 கிலோமீற்ரர் வேகத்தில் பயணிக்கலாம். ஒரு நாளைக்கு 300 தொடருந்துகள் இக்குகையினைக் கடப்பது நோக்கமாகும். அனைத்தும் சரியாக இருப்பின் 60 முதல் 82 நிமிடங்கள் பயணநேரம் சுருக்கப்படுகிறது. சுவிஸ் தொடருந்து சேவை எஸ்.பி.பி. SBB நாளுக்கு 220 முதல் 240 பயணிகள் தொடருந்தினை இக்குகை ஊடாக செலுத்த எண்ணியுள்ளது.

01. 06. 2016 நடைபெற்ற தொடருந்து சுரக்கப்பதை ஊடாக முதலாவது இரயில் இயக்கப்பட்டு குகை கோலாகலமாக சுவிஸ் அரச அதிபரால் திறந்துவைக்கப்பட்டது. 160 000 பொதுமக்கள் முதலாவதாக செல்லும் தொடருந்தில் முதன்முதலாகப் பயணிக்க விண்ணப்பித்திருந்தனர். குலுக்கள் முறையில் 350 மக்கள் திறப்புவிழாவிற்கு அழைக்கப்பட்டு கட்டணமின்றி முதற் தொடருந்துப்பயணத்தை உலகத் தலைவர்களுடன் இணைந்து மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. முதலாவது தொடருந்து 1000 விருந்தினர்களை அழைத்துக்கொண்டு குகையினைக் கடந்தது. யேர்மன், இத்தாலி, பிரான்ஸ் நாட்டு அதிபர்கள் அதிதிகளாக திறப்பு விழாவில் பங்கெடுத்தனர். 600 கலைஞர்கள் இணைந்து நாட்டிய நாடகம் ஒன்றினை நடாத்தியிருந்தனர். பொற்கார்ட் மக்கள் வழக்கத்தில் பேசப்படும் இதிகாச புராண வடிவங்களைத் தாங்கி கலைஞர்கள் நிகழ்ச்சி நடாத்தியிருந்தனர். «ளுயஉசந னநட புழவவயசனழ» குழுவினர் நடாத்திய நிகழ்ச்சியில் மேலாடையின்றி கலைஞர்கள் நடனமடிய வடிவம் சில கட்சிகளால் விமர்ச்சிக்கப்ட்டிருந்தது. அதேபோல் பட்டப்பகலில் சுரங்கப்பாதையின் வடக்கிலும் தெற்கிலும் பாதை திறக்கப்பட்டபோது வானவெடிக் காட்சியும் நடாத்தப்பட்டது. சுவிஸ் விமானப்படை விமானங்கள் வானில் பறந்து குகை திறப்புவிழாவினை முன்னிட்டு சாகசம் செய்தது. இத்திடம் தொடங்கப்பட்டது முதல் இதுநாள் வரை கட்சி – அரசியல் வேறுபாடின்றி இதுவரை போக்குவரத்துத் துறை அமைச்சர்களாக இருந்த மூவரும் (Adolf Ogi, Moritz Leuenberger, Doris Leuthard) பங்கெடுத்து, அரசியலைத் தாண்டி இப்பணியின் சிறப்பினைத் தாங்கள் போற்றுவதாகக் கூறி முதிர்ந்த மக்கள் நல அரசியலை வெளிப்படுத்தினர்.

சுவிஸ் தொடருந்து சேவை நிறுவனம் தனது அறவிப்பில் இது சுவிற்சர்லாந்து பெருமைகொள்ள வேண்டிய திறனாகும். புதிய கண்டுபிடுடிப்பு மற்றும் ஆய்வும் சுவிசின் தகைமைக்குக் கிடைத்த பெருவெற்றி. வடக்கு மக்களை தெற்கிற்க்கு இணைக்கும் பெரும்பாலம் இதுவாகிறது. வடக்கு-தெற்கு முனைவில் 2020 இப்போதைய பயணிகள் தொகை இரட்டிப்பாகும். தற்போது 9000 மக்கள் நாளும் பயணிக்கும் வகையில் தொடருந்து சேவை இருக்கிறது. எதிர்காலத்தில் இத்தொகை 15000 பயணகிளாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் சுவிஸ் இல்லாவிட்டாலும், ஐரோப்பியக்கண்டத்தின் நடுவில் அமைந்திருக்கும் சுவிற்சர்லாந்து, யேர்மன், பிரான்ஸ், இத்தாலி, அவுஸ்திரியாக ஆகிய ஐரோப்பாவின் பலமான நாடுகளின் போக்குவரத்து மற்றும் வழங்கற் பாதையின் முள்ளந்தண்டாக இருக்கிறது. ஆகவே இப்போது அமைக்கப்பட்ட சுரங்கம் சுவிஸ் மக்களுக்கு மட்டும் நற்பலனை அளிக்கவில்லை. மொத்த ஐரோப்பாவிற்கும் பலன் அளிப்பதாகும்.

Gotthard Tunnel
2400 தொழிலாளர்கள்
4'000'000 மணிநேர உழைப்பு
57 கிலோமீற்ரர் தூரம்
28'200'000 வெளிவந்த மண்-கல்
17 ஆண்டுப்பணி
12'500'000'000 சுவிஸ்பிராங் செலவு

2 வழிப்பாதை» Related News

Schnell und Einfach

Das Internet ermöglicht es uns Ihre Kredit-Anfrage schnell zu erhalten und zu bearbeiten. Einfach die Kredit-Anfrage Online ausfüllen und abschicken. In 24 Stunden erhalten Sie bereits eine Rückmeldung!

Sicher und Diskret

Das Vertrauen unserer Kunden ist unsere Priorität. Ihre Kredit-Anfrage wird deshalb bei uns sicher und diskret behandelt. Gerne stehen wir Ihnen jederzeit auch für eine persönliche Beratung zur Verfügung.

Kredit ab 7.9%

Wunschbetrag in CHF:

Laufzeit in mt
Monatliche Rate :
7.9%
11.9%


Selliah Selvarajah (Rasan)

Im Rietpark 5
8180 Bülach.ZH
Switzerland
Mob: 079 765 50 57
Tel: 044 860 12 05, 044 860 12 14
Fax: 044 860 12 13

E.Mail:info@multiconsulting.ch
E.Mail:srasan@hotmail.com