05. 03. 2021 சுவிற்சர்லாந்தின் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே சுவிஸ் அரசின் மகுடநுண்ணித் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையின் தந்திரோபாயமாக விரைவுப்பரிசோதனை முறமையினை அறிமுகப்படுத்தினார்.
Ø மகுடநுண்ணித் தொற்றறியும் விரைவுப்பரிசோதனை நடைமுறைக்கு வரவுள்ளது
Ø பொதுக்கள் மகுடநுண்ணித் தொற்றுப் பரிசோதனைக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை
Ø குறிப்பாக பெருநிறுவனங்கள் மற்றும் பாடசாலை இச் சோதனை முறமைத் திட்டத்தில் இணைக்கப்படுவர்
இன்றைய நாளை சுவிஸ் அரசு மகுடநுண்ணித்தொற்று (கோவிட்-19) நினைவு நாளாக அறிவித்திருந்தது. இற்றைக்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் சுவிசில் முதலாவது மகுடநுண்ணித் தொற்றின் காரணமாக சுவிசில் இறப்பு பதியப்ப்பட்ட நாளாகும்.
இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த சுகாதார அமைச்சர் இதுவரை மகுடநுண்ணித் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த அனைவருக்கும் இரங்கல் தெரிவித்ததுடன் நினைவு வணக்கத்தினையும் செலுத்தி ஊடகவியலாளர் சந்திப்பினை தொடர்ந்து வைத்தார்.
வழமையான வாழ்வு சுவிசில் திரும்புவதற்கு நோய்த்தொற்றுப் விரைவுப்பரிசோதனை மிகத் தேவையான முன்நடவடிக்கை என்றார் சுகாதார அமைச்சர். இதற்க்கான செலவாக 1பில்லியன் சுவிஸ்பிராங்கை சுவிஸ் அரசு ஒதுக்கவுள்ளது.
சுகாதாரத்துறை வரவேற்கவில்லை
சுவிற்சர்லாந்து நடுவனரசின் இந் நடவடிக்கையினை சுகாதாரத்துறை வரவேற்கவில்லை என்பது உண்மையா என சுகாதார அமைச்சரிடம் வினாவப்பட்டது.
இதற்குப் பதில் அளித்த திரு. அலான் பெர்சே: இவ் விரைவுப்பரிசோதனை செய்வோர் நோய் உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் தாமாக முன்வந்து தமது நோய்த்தொற்றை எங்கேனும் பதிவுசெய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இது ஒருவருக்கு நோய்த் தொற்று உண்டு என்பதை உறுதிப்படுத்தும்.
நோய்த்தொற்றிற்கு ஆளானவர் தன்னை தனிமைப்படுத்த இப் பெறுபேறு உதவும்.
சுகாதரத்துறை அதிகாரிகள் இதனடிப்படையில் சுவிஸ் அரசுடன் இணக்கக் கருத்தில் இல்லை.
இருந்தபோதும் இது நோய்த்தொற்றிற்கு தேவையான ஒரு செயல் என்றார்.
தளர்வு நடவடிக்கை உண்டா?
இவ்வகை பரிசோதனை நடைமுறை வரும்போது உடனடியாகத் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த சுகாதார அமைச்சர்: நாம் விரைந்து தளர்வுகளை அறிவித்து, சூழலை உறுதி இழக்கச் செய்ய விரும்பவில்லை. கவனத்துடன் ஒவ்வொரு அடிகளையும் எடுத்து வைக்கின்றோம் என்றார்.
விரைவுப் பரிசோதனை
சுகாதார அமைச்சர் தன் மொழியில் விரைவுப்பரிசோதனை செய்முறையினை விளக்கினார்: பல்துலக்குவதுபோல ஒரு வகை தூரிகை கொண்டு மூக்குத் தூவராத்திற்குள் விடவேண்டும். அதன் அளவு மூக்கின் முடிவுவரை செல்லாது. ஆகவே எவரும் செயல்முறை விளக்கம் கொண்டு இலகுவாக செய்யலாம் என்றார்.
ஊடகவியலாளர்கள் மீளவும் இதன் முறையை மேலும் விளக்க வேண்டியபோது, துறைசார் நிபுணரிடம்
ஒருமாத்திற்கு 5 பரிசோதனைகள் செய்யலாம்
ஒருவர் ஒருமாதத்திற்கு ஆகக்கூடியது 5 பரிசோதனைகளை கட்டணமின்றி செய்துகொள்ளலாம். இதனை மருந்தகங்களில் பெற்றுக்கொண்டு பெறுபேறு பெறுவதற்கு சோதனைவில்லைகளை அங்கு அளிக்கலாம். மருத்துவக்காப்புறுதி இலக்கபதில் கேட்டார் சுகாதார அமைச்சர். அதற்கு பதில் அளித்த அதிகாரி, இப்பரிசோதனை முறை மூக்கின் உள்தோல் மீது சோதனைப்பூச்சு செய்வதுபோன்றது என்றார். த்துடன் மட்டுமே இப்பரிசோதனை வில்லைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு மாதத்திற்குள் 5 மேற்பட்ட பரிசோதனை வில்லைகள் ஒருவர் பெற்றுக்கொண்டால் அதற்கு அவரே கட்டணம் செலுத்த வேண்டிவரும் என்றார் சுகாதார அமைச்சர்.
சிறப்புரிமை அளிக்கப்படுமா?
பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை எனும் பெறுபேறு கிடைக்கப்பெற்றால் அல்லது தடுப்பூசி இட்டவர் அதன் சான்றுடன் சிறப்புரிமைகளைப் பெறுவார்களாக என வினாவப்பட்டது.
இதற்கு சுகாதார அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்: பெருநிகழ்வுகள், விழாக்கள் நடைபெறும்போது இவ்வாறான விரைவுப்பரிசோதனை ஒரு பயனுள்ள செயலாக இருக்கலாம். அதுபோல் எதிர்காலத்தில் தடுப்பூசிச் சான்றின் பயனும் படிநிலைகளில் பயனுள்ளதாக அமையலாம் என்றார்.
விரைவுப் இப்பரிசோதனை முறையை மக்கள் எதிர்வரும்நாட்களில் பயன்படுத்திக்கொள்ளலாம், இதனூடாக திரிவடைந்த மகுடநுண்ணித் தொற்றும் முற்கூட்டி அறியக்கூடலாம். இது நோய் பரவாமல் தொற்றுக்குள்ளானவர்கள் தம்மை முற்கூட்டி தனிமைப்படுத்திக்கொள்ள உதவும்.
மக்கள் உரிய சட்டங்களைக் கடைப்படிப்பதும், பரிசோதனை செய்துகொள்வதும் தற் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதும் மக்கள் பொறுப்பு என்றார் சுவிஸ் சுகாதார அமைச்சர்.
காப்பமைவு
ஒவ்வொரு நிறுவனங்களும் அமைப்புக்களும் நோய்த்தடுப்பு காப்பமைவினை எழுத்தில் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி மற்றும் விரைவுப்பரிசோதனை நடைமுறைக்கு வந்தாலும் இவ்வாறான காப்பமைவுகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்படவேண்டும்.
நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டடோர் தம்மைத் தனிமைப்படுத்தி, நோய் பரவாது சமூகத்தைக் காத்துக்கொள்ளவேண்டும்.
இது மகுடநுண்ணி நோய்த் தடுப்புச் சட்டத்தில் விதியாகவும் உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
தொகுப்பு: சிவமகிழி
வருமானவரிப் படிவம் நிரப்புதல் 2020,
60.- CHF மட்டுமே.
05.03.21 சுவிஸ் அரசின் அறிவிப்பு