மகுடநுண்ணித் (கோவிட்-19) தொற்று
24. 11. 2021 சுவிற்சர்லாந்து அரசின் ஊடக சந்திப்பு
உய்ய நெருக்கடிநிலை
கடந்த 24.11.21 அன்று 24 மணிநேரத்திற்குள் 8585 மகுடநண்ணித் தொற்றுக்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சுவிஸ் அரசு இதனை உய்ய நெருக்கடி நிலையாகப் நோக்குகின்றது. இருந்தபோதும் இவ் ஊடக சந்திப்பில் கடந்த காலங்களைப்போன்று புதிய முடக்கங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சுவிற்சர்லாந்து அரசால் ஆணை வழங்கப்பட்ட துறைசார் அறிஞர்குழு 23. 11. 21 நடாத்தியிருந்த ஊடக சந்திப்பில் அவுஸ்திரியா நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளை சுவிசும் எதிர்கொள்வதாக தெரிவித்திருந்தது. தற்போது அவுஸ்திரியாவும் யேர்மனியில் பாதிக்கப்பட்ட இடங்களும் முடக்க நடவடிக்கையினை கடைப்பிடிக்கின்றார்கள்.
நாடுமுழுவதும் ஒரே நிலை இல்லை
மாநிலங்களுக்கு மாநிலம் தொற்றுத் தொகை வேறுபடுவதால் நாடு முழுவதும் ஒரே நெருக்கடி நிலவுவதாக பார்க்க முடியாது என்றும் நடுவன் அரசு அனைத்து மாநிலங்களுடனும் அடுத்த தமது நடவடிக்கை தொடர்பாக பேசி வருவதாகவும் சுவிசின் நலவாழ்வு (சுகாதார) அமைச்சர் திரு. அலான் பெர்சே தெரிவித்திருந்தார்.
சுவிற்சர்லாந்தின் 26 மாநில அரசுகளும் தமது மாநிலத்தில் நிலவும் சூழலிற்கு ஏற்ப புதிய நடவடிக்கைகளை அறிவிக்க இணக்கத்தினை நடுவனரசு வழங்கி உள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் 26. 11. 21 வரை கலந்துரையாட உள்ளன.
மாநிலங்கள் புதிதாக என்ன அறிவிக்கலாம்?
கடந்த நாட்களில் மருத்துவமனைகளில் தங்கி வைத்தியம் பெறும் மகுடநுண்ணித் தொற்று நோயாளர்கள் தொகை அதிகரித்துச் செல்கின்றது. பாடசாலைகளில், பணியிடங்களில், கட்டத்திற்குள் மீண்டும் முகவுறை அணிவது இறுக்கப்படலாம். மேலும் வீடுகளில் இருந்து பணி செய்ய வாய்ப்புள்ளோர், வீடுகளில் இருந்தபடி பணி ஆற்ற வேண்டப்படலாம். அடுத்த நாட்களில் ஒவ்வொரு மாநிலமும் தமது முடிவுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
12 வயதிற்கு உட்பட்டோர்களுக்குதடுப்பூசி வருமா?
சுவிற்சர்லாந்து நாட்டின் நலவாழ்வுத்துறை அலுவலர் திரு. பத்திறிக் மத்தீஸ் இதற்கு இவ்வாறு பதில் அளித்தார்: குழந்தைகளுக்கு மகுடநுண்ணித் தொற்றுத் தடுப்பூசி எப்போது இட்டுக்கொள்ளும் நடைமுறை வரும் என இப்போது எதிர் கூறமுடியாது என்றார். உரிய சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சுவிஸ் அரசு ஒப்புதல் அளிக்கும் காலத்தை வரையறையிட்டு இப்போது கூறமுடியாது என்றார்.
பனிக்குளிர் காலத்திற்குள் மீண்டும் முடக்கம் சுவிசில் ஏற்படுமா?
குளிர்காலத்திலும் பெருமுடக்க ஆணையினைப் பிறப்பிக்காது நலவாழ்வு நடைமுறைளை குறிப்பாக தடுப்பூசி இடுவதன் ஊடாக கடைப்பிடிக்க சுவிற்சர்லாந்து அரசு முனைகின்றது. ஆனால் அரசின் இம்முனைப்பு உரிய வெற்றியினை ஈட்டமுடியாதுபோனால்அடுத்த நடவடிக்கை தொடர்பில் மீண்டும் கலந்தாய்வு செய்யப்படும் என்றார் சுகாதார அமைச்சர் திரு. பெர்சே.
புதிய முடக்கமாக எத்தகைய அறிவிப்பு வரலாம்?
தற்போது நாம் எந்தப் புதிய முடக்கத்தினையோ அல்லது நடவடிக்கையினையோ திட்டமிடவில்லை. ஆனால் புதிய தளர்வுகளை இப்போது அறிவிக்க முடியாது. நாம் தற்போது இணைவுறு புதிய முடக்கம் ஏற்படுவதையும் பக்கதுணையான பாதிப்புக்களையும்தவிர்க முனைகின்றோம் என்றார் சுகாதார அமைச்சர்.
தற்போதைய சூழலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடலாமா?
இல்லை, தற்போது மக்கள் கடந்த ஆண்டைக்காட்டிலும் அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன் உள்ளார்கள். ஏனெனில் பலரும் உரிய தடுப்பூசி இட்டுக்கொண்டுள்ளார்கள், அதனால் 2020வைக் காட்டிலும் தற்போது மறையிடர் குறைவு என்றார் திரு. பெர்சே., ஆனாலும் மருத்துவமனைகளில் தங்கியிருந்து வைத்தியம் செய்வோர் தொகை அதிகரிக்குமானால் இது இடராகவே நோக்க வேண்டி வரும் என திரு. பத்திறிக் எச்சரித்தார்.
சுவிஸ் அரசு 'நெருப்புடன் விளையாடுகின்றதா'?
இவ்வாறு ஒரு ஊடகவியலாளர் வினாவியபோது சுகதார அமைச்சர் இப்பதிலை அளித்தார்: கடந்த காலங்களில் தடுப்பூசி இடப்படாத சூழலும் இதுவும் ஒன்றல்ல. மேலும் நோயிடர் அடையக்கூடிய வயதானோர், முன்நோய் உள்ளோர் பெரும்பாலும் இரு ஊசிகள் இட்டுக்கொண்டுவிட்டனர். முன்னை 2020 போல் தொற்றுக்குள்ளானோர்தொகை ஒருகிழைமைக்குள் இரட்டிப்பும் அடையவில்லை. ஆகவே நாம் பொறுத்திருப்பது பொருத்தமாகும் என்றார்.
எதிர்வரும் ஞாயிறு நடைபெறும் வாக்கெடுப்புக்காரணமாக அரசு பதிய முடக்கத்தினை அறிவிக்கவில்லையா?
எதிர்வரும் ஞாயிறு மகுடநுண்ணி நடவடிக்கை தொடர்பான வாக்கெடுப்பு சுவிற்சர்லாந்து முழுவதும் நடைபெற உள்ளது. இவ்வாக்கெடுப்பு அரசின் நடவடிக்கைக்கு எதிரான சக்திகளை அதிகரிக்கச் செய்யும் எனும் அச்சத்தால் புதிய நடவடிக்கை மற்றும் முடக்கத்தினை சுவிஸ் அரசு தள்ளிப்போடுகின்றதாஎன ஊடகவியலாளர் வினாவியபோது, சுகாதார அமைச்சர் திரு. பெர்சே இடைமறித்து இவ்வாறு பதில் அளித்தார்: வாக்கெடுப்பு அல்ல, மருத்துவமனையில் தங்கியிருந்து மருத்துவம் செய்யும் மகுடநுண்ணித் தொற்று நோயாளர் தொகையே எமது செயல்களைத் தீர்மானிக்கும் என்றார்.
மகுடநுண்ணித்தொற்றுப் பரிசோதனை மீணடும் கட்டணம் அற்று வழங்கப்படுமா?
இல்லை, தற்போதைக்கு சுவிஸ் அரசிற்கு இவ்வாறான எண்ணம் இல்லை, ஆனால் இரு பாராளுமன்றக் குழுக்கள் கட்டணமற்ற மகுடநுண்ணித்தொற்றுச் சோதனைகளுக்கு அரசு ஒப்புதல் வேண்டி விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார்கள் என விழித்தார் திரு. பெர்சே.
சுவிசின் கிழக்கு மற்றும் நடுவப்குதியில் தொற்று ஏன் அதிகரித்தது? அம் மாநிலங்கள் இனி என்ன செய்ய வேண்டும்?
நடுவனரசு மாநிலங்களுக்கு எத்தகைய விதிகளையும் அறிவுறுத்தவில்லை. மாநிலங்கள் தமது சுயநிர்ணய உரிமையுடன் செயற்படுகின்றன. நாம் நாடு தழுவிய வகையில் முன்மொழிவுகளை மட்டுமே வழங்குகின்றோம். நடுவனரசு மட்டத்திலும் மாநில அரசு மட்டத்திலும் சுகதார நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை தொடரப்பட வேண்டும்.
தடுப்பூசி
முன்னர் சொன்னபடி மகுடநுண்ணித் தொற்றுத் தடுப்பூசி பெருந்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் எம்முன் உள்ள சிறந்த வழியாகும். இரு ஊசிகள் இட்டபின்னர், நிரப்பியாக (பூஸ்ரராக) 3வது தடுப்பூசி இட்டுக்கொள்வது சிறந்த பாதுகபாப்பினை மக்களுக்கு வழங்கும். இவ்வாறான 3வது தடுப்பூசி 90 வீதம் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் என்பதும் சுவிசின் ஆய்வில் உறுதியாகியுள்ளது. மாநில அரசுகள் இதற்கு உரிய வாய்பினை மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். தடுப்பூசி இட்டுக்கொள்ளாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி இட வேண்டும் என சுகாதார அமைச்சர் வேண்டுகை விடுத்தார்.
தொகுப்பு: சிவமகிழி