FIFA WORLDCUP QTAR 2022
உலகக்கோப்பை கால்பந்து போட்டி 20.11.2022
உலகம் முழுவதிலும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கி உள்ளது.
கத்தார் நாட்டில் பல்வேறு நாடுகளின் லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்து குவிந்துள்ள அதேவேளை,திரும்பிய இடமெல்லாம் ரசிகர்களின் தலைகளாகவே தென்படுகின்றன.கோடானு கோடி கால்பந்து ரசிகர்களின் பேரார்வத்திற்கு கத்தார் விருந்து படைக்கவிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
கால்பந்தில் குறிப்பாக உலகக்கோப்பை நிஜமாகவே உலகம் முழுவதிலுமான ரசிகர்களால் ஆராதிக்கப்படுகிறது. கத்தாரின் மக்கள் தொகையே 30 லட்சத்தை தாண்டாது. ஆனால், இந்த உலகக்கோப்பை தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு வரைக்குமே போட்டிகளை நேரில் காண 30 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்திருக்கிறது. உலகக்கோப்பையின் வியக்க வைக்கும் பிரம்மாண்டத்திற்கு இதுவே ஒரு சான்று. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடக்கப்போகும் இந்த உலகக்கோப்பையில் உலகின் 32 நாடுகள் கலந்துகொள்ள, அடுத்த 29 நாள்களுக்கு பரபரப்பும், விறுவிறுப்புமாக நடைபெற இருக்கிறது.
32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவிற்கு 4 அணிகள். இந்த 4 அணிகளும் தங்களுக்குள்ளாக மோதிக் கொள்ளும். முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு அணிகளை பிடிக்கும் அணிகள் அடுத்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். அதன்பின், எல்லாமே நாக் அவுட்தான். தோல்வியேயின்றி கடைசி வரை எஞ்சியிருக்கும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
28 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட கத்தார், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக 220 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் 8 கால்பந்து மைதானங்கள், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை, நட்சத்திர விடுதிகள் என கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து நாடுகளும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.
போட்டிகளையொட்டி, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஏராளமான வசதிகளை கத்தார் நாடு ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் தோஹாவைச் சுற்றி எட்டு கால்பந்து மைதானங்கள் இந்த கால்பந்து திருவிழாவுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளன. புத்தம் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியங்கள் நட்சத்திர விடுதிகளை மிஞ்சும் அளவுக்கு பிரமிப்பாகவும் வசதிகள் கொண்டதாகவும் உள்ளன.
கத்தாரில் மிகப் பிரம்மாண்டமான முறையில் இந்த உலகக் கோப்பை தொடங்கியுள்ள போதிலும், இதைச் சுற்றிய சர்ச்சைகளும் தொடர்ந்தே வருகிறது. அந்த சர்ச்சை இப்போது தொடங்கியது இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2010இல் எப்போது உலகக் கோப்பை நடத்தும் உரிமையை கத்தார் வென்றதோ, அப்போதில் இருந்தே இதுபோன்ற சர்ச்சைகள் தொடங்கிவிட்டது. உலகக் கோப்பை நெருங்க நெருங்க இந்த சர்ச்சை அதிகரித்தே தவிரக் குறைந்தது போலத் தெரியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு, போட்டி நடைபெறும் இடங்களில் பீர் விற்பனைக்கு கத்தார் தடை விதித்து இருந்தது.
மேலும்,கத்தாரை போட்டி நடத்தும் நாடாகத் தேர்வு செய்தது தவறு என்று முன்னாள் பிபா தலைவர் செப் பிளாட்டர் தெரிவித்தார். கத்தார் மிகச் சிறிய நாடு என்றும் உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகள் அங்கு நடத்துவது கஷ்டம் தான் என்றும் செப் பிளாட்டர் தெரிவித்தார். 1954இல் சுவிட்சர்லாந்து உலகக் கோப்பையை நடத்திய நிலையில், அதன் பின்னர் உலகக் கோப்பையை நடத்தும் மிகச் சிறிய நாடு கத்தார் தான்.
போட்டியை நடத்த உரிமை பெற்ற பிறகு கத்தார், மைதானங்களை மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக ஹோட்டல், நெடுஞ்சாலை என அனைத்தையும் புதிதாகக் கட்ட வேண்டி இருந்து. அப்போது பல மனித உரிமை மீறல்களும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் 5 ஆசிய நாடுகளில் இருந்து மட்டும் சுமார் 6500 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.
சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட இந்த உலகக் கோப்பை மகத்தான ஒன்றாக நிச்சயம் இருக்கும்.கோடிக் கணக்கான ரசிகர்களை தங்கள் நாட்டிற்கு வரவேற்கும் கத்தார், மிகப் பிரம்மாண்டமான ஒரு உலகக் கோப்பையை நடத்தவும் திட்டமிட்டு உள்ளது.இந்த உலகக் கோப்பையில் பல சாதனைகளும் உள்ளன. கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் முதல் அரபு நாடு மற்றும் முதல் மத்திய கிழக்கு நாடு என்ற சிறப்பை கத்தார் பெற்றுள்ளது. இதற்கு முன்பு உலகக் கோப்பையில் பங்கேற்காத நாடு, நேரடியாக உலகக் கோப்பையை நடத்தி அதில் கலந்து கொள்வதும் இதுவே முதல்முறை. உள்ளூர் ரசிகர்களைக் கவர எப்போதும் போட்டி நடத்தும் நாடு தானாகவே உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும். அப்படித்தான் தரவரிசையில் 52ஆவது இடத்தில் இருக்கும் கத்தார் இந்த உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது.
மேலும்,கத்தார் உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் வெயில் எந்தளவுக்கு வாட்டி வதைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிக்கவே இந்த முறை குளிர் காலத்தில் உலகக் கோப்பை போட்டிகள் நடக்கிறது. குளிர் காலத்தில் கால்பந்து உலகக் கோப்பை நடப்பதும் இதுவே முதல்முறையாகும்.
அதேபோல இந்த உலக கோப்பை தொடரில் புதிய விதிகள் மற்றும் தொழில்நுட்பங்களும் அறிமுகமாக உள்ளது. பொதுவாக 3 மாற்று வீரர்கள் மட்டுமே கால்பந்து போட்டிகளில் அனுமதிக்கப்படும் நிலையில், கத்தார் உலகக் கோப்பையில் இது 5ஆக அதிகரிக்கப்படுகிறது.அதேபோல ஆட்டோமெடிக்காக ஆஃப்சைடை கண்டறிய ஓஃப்சைட் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதேபோல இதில் கலந்து கொள்ள 3 பெண் நடுவர்கள் நடுவர்களாகத் தேர்வாகி உள்ளதும் இதுவே முதல்முறை.
இன்றைய ஆரம்ப நிகழ்வு 60,000 இருக்கைகள் கொண்ட அல்மேத் மைதானத்தில் நடைபெற்றது.கத்தார் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்நாட்டு கலைஞர்களின் இசை,நடனம், பாடல்கள் அரங்கேறிய அதேவேளை,வெளிநாடு கலைஞர்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றன.மேலும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் முதல் வரிசையில் ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவுக்கு அருகில் அமர்ந்திருந்தார்.
கட்டார் உலக கிண்ண போட்டிகளுக்காக 30 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இருந்து சுமார் 12 லட்சம் ரசிகர்கள் போட்டியைக் காண்பதற்கு கத்தாருக்கு வந்து குவியலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக 90 வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் கத்தார் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில்,சர்ச்சைகளுக்கும் பரபரப்புகளுக்கும் மத்தியில் ஆரம்பமாகியிருக்கும் கத்தார் உலகக்கிண்ண தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமலிருக்குமென்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. உலகக் கோப்பையை கைப்பற்றுவதில் ஐரோப்பிய நாடுகளுக்கும் தென்அமெரிக்க நாடுகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில்,உலகக் கோப்பையை கைப்பற்றுவதில் ஐரோப்பிய நாடுகளுக்கும் தென்அமெரிக்க நாடுகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும். 2002ம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட தென்அமெரிக்கா வெல்லாத நிலையில் தென்அமெரிக்க ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இந்த தொடரில் நிலவுகிறது.
ஃபிஃபா 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-ல் ரஷியாவில் முதல்முறையாக நடைபெற்ற போது தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றது. குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்நிலையில்,கால்பந்து உலகக் கோப்பையை இரு நாடுகள் மட்டுமே அடுத்தடுத்து 1934, 1938-ல் இத்தாலியும் 1958, 1962-ல் பிரேசிலும் தொடர்ச்சியாக வென்றுள்ள நிலையில்,கடந்தமுறை உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணி - இத்தாலி, பிரேசில் வரிசையில் நிற்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
மேலும்,இந்த முறை நடப்பு உலக சாம்பியனான பிரான்ஸ் தனது பட்டத்தை காப்பாற்ற கடுமையாக முயற்சிக்கும் அதேவேளை, பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல், கடைசி ரன்னர்-அப் குரோஷியா ஆகிய அணிகள் முக்கிய உலகக் கோப்பை கோப்பையை கைப்பற்ற வலுவான போட்டியாளர்களாக உள்ளன.