இலங்கையிலிருந்து வருபவர்களுக்கான மருத்துவக்காப்புறுதி 92 நாட்கள் CHF 531.-
வீடுகள் விற்பனைக்கு
AUDIO NEWS- ஒலி வடிவம்
FIFA WORLDCUP QTAR 2022
உலகக்கோப்பை கால்பந்து போட்டி 20.11.2022
உலக திருவிழாவாக கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடர் கட்டாறில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.இதன் முதல் போட்டியில் மோதிய கத்தார்- ஈக்வடார் போட்டியில் ஈக்குவடோர் அணி உலகக்கிண்ணத்தை நடத்தும் கத்தார் அணியை வீழ்த்தியிருந்தது. இதன்மூலம் 92 ஆண்டு பிபா கால்பந்து உலகக்கிண்ண வரலாற்றில், தொடக்க போட்டியில் முதல்முறையாக தொடரை நடத்தும் அணி தோல்வியடைந்த மோசமான வரலாற்றை கத்தார் அணி பதிவுசெய்த அதேவேளை, கத்தாரை வீழ்த்திய வரலாற்று பெருமையை ஈக்வடார் அணி பெற்றது.
அத்துடன் இந்த போட்டியில் ஈக்வடார் அணி அடித்த முதல் கோல் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே ஈக்வடார் அணியின் தலைவர் வலேன்சியா கோல் அடிக்க, ஈக்வடார் ரசிகர்கள் துள்ளி குதித்தனர். எனினும், அந்த கோலை வீடியோவில் ஆய்வு செய்த நடுவர், கோல் இல்லை என அறிவித்தார்.நடப்பு உலகக் கோப்பையில், ஓப் சைட் கோல்களை கண்காணிப்பதற்காக, புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில்,பந்தை அடிப்பதற்கு முன்னதாகவே, ஈக்வடார் வீரர் மைக்கேல் எஸ்ட்ராடா ஓப் சைடாக இருந்தது தெரியவந்தது. அதுவும் அவரது வலது காலின் பாதம் மட்டுமே ஓப் சைடாக இருந்ததனால் ஈக்வடார் அணிக்கு அந்த கோலை நடுவர்கள் வழங்கவில்லை.
அதேபோல்,கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த தொடர் பல்வேறு சர்ச்சைகளை சுமந்து வருகின்றது.போட்டியை நடத்த உலக கால்பந்து கூட்டமைப்பான பீபாவுக்கு கத்தார் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தற்போது வரை கால்பந்து உலகை உலுக்கி வருகின்ற நிலையில்,தங்களுக்கு எதிரான போட்டியில் தோற்கவேண்டும் என்று எட்டு ஈக்வடார் வீரர்களுக்கு கத்தார்7.4 மில்லியன் டொலர் லஞ்சம் கொடுக்க முயன்றதான குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சவுதி அரேபியாவில் உள்ள பிரிட்டிஷ் மையத்தின் பிராந்திய இயக்குநருமான அம்ஜத் தாஹா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள குறித்த குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதேபோல்,இரண்டாம் நாள் ஆட்டத்தில் மூன்று போட்டிகள் இடம்பெற்றன.இதில் இம்முறை மகுடம் சூடும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டு உள்ள ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கும் ஆசிய கண்டத்தின் நம்பர் 1 அணியான ஈரான் அணிக்கும் இடையில் நடைபெற்றது.1966 ஆம் ஆண்டின் சாம்பியனான இங்கிலாந்து அணி,கடந்த உலக கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியிருந்தது. இதனால் இந்த போட்டியில் இங்கிலாந்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என ஏற்கனேவே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அத்துடன் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்களிடத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டிருந்த போதிலும்,6-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே ஈரான் வீரர்களின் செயல் உலகை திரும்பி பார்க்கும் வகையில் அமைந்ததது. போட்டியின் தொடக்கத்தில் ஈரான் நாட்டின் தேசிய கீதம் பாடப்பட்ட போது அந்நாட்டு வீரர்கள் அமைதி காத்தனர். அவர்களின் செயல்பாடு, தாயகத்தில் காவலில் இருந்த 22 வயது குர்திஷ் சமூக செயல்பாட்டாளர் மாசா அமினியின் மரணத்துக்கு எதிராக போராடி வரும் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அணியின் 11 வீரர்களும் அமைதி காத்ததுடன்,தங்களின் முகத்தை இறுக்கமாகவும் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமலும் இருந்தனர்.கடுமையான இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதற்காக கைது செய்யப்பட்ட இளம் பெண் மாசா அமினியின் மரணம் ஈரானில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒருவித கிளர்ச்சியைத் தூண்டி வருகிறது.இந்நிலையில்,ஈரானிய வீரர்களின் இந்த செயல்பாட்டை, சமூக ஊடகங்களில் பல்வேறு துறை பிரபலங்களும் பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, சில ஈரானிய வீரர்கள் உலக கோப்பை போட்டியில் விளையாடும் முன்பு தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதனுடன் சேர்ந்து பாட வேண்டாம் என்று தீர்மானித்திருந்த நிலையில்,விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் அரசியலைக் கலக்கக் கூடாது என்றும் அவர்கள் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஈரானிய ஆட்சியாளர்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.ஆனால் அதையும் மீறி ஈரான் வீரர்கள் தங்களுடைய எதிர்ப்பை சர்வதேச அரங்கொன்றில் வெளிப்படுத்தியிருப்பது பெரும் தாக்கத்தை அந்நாட்டுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.