FIFA WORLDCUP QTAR 2022
உலகக்கோப்பை கால்பந்து போட்டி 24.11.2022
குறைவில்லாத பரபரப்புகள், ஜாம்பவான் அணிகளின் அதிர்ச்சி தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் ரசிகர்கள்,விடாமல் துரத்தும் சர்ச்சைகள்,அடி மேல் அடி கொடுக்கும் ஆசிய அணிகள் என கத்தார் உலக கிண்ண கால்பந்து போட்டிகள் நாளுக்கு நாள் பரபரப்புகளுக்கு குறைவில்லாமல் நடந்துகொண்டிருக்கின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ரசிகர்களால் அதிக கவனத்தை ஈர்த்திருந்த ஆர்ஜென்டீனா -சவுதி அணிகளுக்கிடையிலான போட்டி கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.மேற்படி போட்டிக்கு முன்பு யாருமே ஆர்ஜென்டினாவுக்கு எதிராக சௌதி அரேபிய வெற்றி பெறும் என்று எவரும் கருதியிருக்க மாட்டார்கள்.ஏன், ஒரு கோல் அடிப்பதுகூட சவுதிக்கு சாத்தியமில்லை என்றுதான் நினைத்திருப்பார்கள்.ஆனால் உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சியை சவூதி அரேபியா ஆர்ஜென்டினாவுக்கு கொடுத்தது.தரவரிசையில் 51-ஆவது இடத்தில் இருக்கும் சவூதி அரேபியா தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் ஆர்ஜெண்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் கடைசி 36 போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத ஆர்ஜெண்டினாவை வீழ்த்தி அந்த சாதனையை முறியடித்து அதிர்ச்சியை கொடுத்தது. இதன் மூலம் ஆர்ஜென்டினா அணியை உலகக் கோப்பை போட்டி ஒன்றில் வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற வரலாற்றை சவூதி அரேபியா தனதாக்கிக்கொண்டது.
இதற்கு முன்னரும் ஆசிய அணிகள் பெரிய அணிகளை வீழ்த்திய வரலாறுகள் உண்டு.கடந்த உலகக் கோப்பை போட்டியில் தென் கொரிய அணி, அப்போதைய சம்பியனான ஜெர்மனியை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் ஜெர்மனி போட்டியை விட்டு வெளியேறியிருந்தது.அதேபோல், இதே சௌதி அரேபிய அணி 1994-ஆம் ஆண்டு பெல்ஜியம் அணியை வீழ்த்தியிருந்தது.ஆனால் அவை எல்லாவற்றையும் விட ஆர்ஜென்டினாவின் தோல்வி மிக மோசமானதாகவே கருதப்படுகிறது.ஏனென்றால் இதற்கு முன் எந்த அணியும் 36 முறை தோல்விகளைச் சந்திக்காமல் இருந்துவிட்டு இவ்வாறு மோசமான தோல்வியைச் சந்தித்திருந்ததில்லை.
இதேபோன்றுதான் 1990-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் அப்போதைய சம்பியனான ஆர்ஜென்டினா அணி மிகச் சிறந்த வீரரான மரடோனா தலைமையில் களமிறங்கி முதல் போட்டியிலேயே ஆப்பிரிக்க நாடான கேமரூனிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து உலகக் கோப்பை வரலாற்றில் அதிர்ச்சிகரமான முடிவுகளுள் ஒன்றாக பதிவு செய்திருந்தது.இந்தப் போட்டியில் வென்றதற்காக கேமரூனில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டது.அதேபோல் இம்முறை ஆர்ஜென்டீனாவை தோற்கடித்ததற்கான வெற்றியை கொண்டாடும் விதமாக சவுதி அரேபியா மன்னர் நாடு முழுவதும் பொது விடுமுறை தினத்தை அறிவித்திருந்தார்.
உலகின் ஜாம்பவானாக கருதப்படும் ஆர்ஜென்டீனாவின் வீரர் மெஸ்ஸியின் இறுதி உலகக்கிண்ண தொடர் இதுவென அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில்,இந்த முறை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்த்து இருந்த நிலையில் சவுதி அரேபியாவிடம் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, சமூக வலைதளங்களில் விமர்சனமும் விவாதங்களும் எழுந்த வண்ணமே உள்ளன.அர்ஜென்டினா அணி முதல் பாதியில் இரண்டு, மூன்று கோல்களை அடித்திருக்க முடியும் என்றும், ஆனால், அணியின் சில வீரர்கள் போதுமான உடற்தகுதியில் இல்லை, என தெரிவிக்கின்றனர். கிறிஸ்டியன் ரொமேரோ, லின்ட்ரோ பேரிடிஸ், ஏஞ்சல் டி மரியா ஆகிய வீரர்கள் காயம் காரணமாக சரியாக விளையாடவில்லை என தோல்விக்கு காரணம் கூறப்பட்டுவருகிறது.
இந்நிலையில், சவுதி அரேபியாவுடனான தோல்விக்கு பின் மெஸ்ஸி என்ன செய்தார், அணி வீரர்கள் என்ன பேசினர், விரக்தியை வெளிப்படுத்தினாரா, கண்ணீர் விட்டாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்த நிலையில் சவுதி அரேபியா அணியுடனான தோல்வி குறித்து லயோனல் மெஸ்ஸி கூறுகையில், உண்மை என்னவென்றால், இறந்ததை போல் உணர்கிறோம். இது மிகவும் கடினமாக உள்ளது.
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும், 3 புள்ளிகளை பெற வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது. ஆனால் எங்களின் 3 புள்ளிகளை இன்னொரு அணிக்கு கொடுப்போம் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் காரணத்தோடு மட்டுமே அனைத்து காரியங்களும் நடக்கும். அடுத்து வரும் போட்டிகளுக்கு எங்களை தயார்படுத்த இந்த தோல்வி உதவும். எதிர்வரும் ஒவ்வொரு போட்டிகளையும் வெல்ல வேண்டும். அது எங்களின் கைகளில் மட்டுமே உள்ளது என்று தெரிவித்தார்.
எதிர்வரும் வரும் 27ம் திகதி மெக்சிகோ அணியையும், டிசம்பர் 1ம் திகதி போலந்து அணியையும் ஆர்ஜென்டினா எதிர்கொள்ள உள்ளது. இந்த இரு அணிகளியும் வீழ்த்தினால் மட்டுமே அர்ஜென்டினா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். இந்த இரு போட்டிகளில் ஒன்றில் தோல்வியடைந்தாலும், உலகக்கோப்பையில் இருந்து வெளியேறும் நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல்,புதன்கிழமை நடந்த இன்னுமொரு போட்டி கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.நான்கு முறை கால்பந்து சாம்பியனான ஜேர்மன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கால்பந்து ரசிகர்களுக்கு கொடுத்தது.நான்கு முறை உலகக்கோப்பை சம்பியன் மற்றும் உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள ஜெர்மனியின் முதல் போட்டி என்பதால், கால்பந்து ரசிகர்கள் அனைவரும் இந்தப் போட்டியினை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில்,இந்த போட்டியின் முதல் பாதி வரை மைதானத்தில் ஜெர்மனியின் ஆதிக்கமே நிரம்பியிருந்தது. பொசிசனும் அவர்களிடம்தான் அதிகம் இருந்தது.ஆனாலும் ஜெர்மனியால் ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.ஜெர்மனி வீரர்கள் பல சமயங்களில் பந்தை தங்களின் பாதி பகுதியிலேயே வைத்திருந்தனர். ஜப்பானின் டிபன்ஸை அத்தனை எளிதாக அவர்களால் உடைக்க முடியவில்லை.ஜெர்மனி அடித்த அந்த ஒரு கோலுமே தப்பித்தவறி ஜப்பானின் கீப்பர் செய்த ஒரு தவறினால் மட்டுமே கிடைத்தது.
போட்டியில் ஜப்பான் அணி வென்றதை மைதானத்திலேயே உற்சாகமாக கொண்டாடிய ஜப்பான் ரசிகர்கள் போட்டி முடிந்தபின், அவர்கள் போட்ட குப்பையை அவர்களே சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது உலக கால்பந்து ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது.
அத்துடன்,கத்தார் அரசு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் பீர் அருந்த தடைவிதித்துள்ளதனைத் தொடர்ந்து உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ விளம்பரதாரரான பீர் தயாரிப்பு நிறுவனமான (Budweiser) ட்விட்டரில் ஒரு பதிவை இட்டிருக்கிறது.அதாவது உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு, இந்த தொடருக்காக தயாரிக்கப்பட்ட பீர்கள் அனைத்தும் வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
நாளை மேலுமொரு கத்தார் உலக கிண்ண தொடரின் விறுவிறுப்பான தகவலுடன் சந்திக்கிறோம்.நன்றி வணக்கம்.