இலங்கையிலிருந்து வருபவர்களுக்கான மருத்துவக்காப்புறுதி 92 நாட்கள் CHF 531.-
வீடுகள் விற்பனைக்கு
AUDIO NEWS- ஒலி வடிவம்
FIFA WORLDCUP QTAR 2022
உலகக்கோப்பை கால்பந்து போட்டி 25.11.2022
உலகக்கோப்பை தொடரில் குரூப் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள தரவரிசையில் 15 வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து அணியும், 43வது இடத்தில் உள்ள கேமரூண் அணியும் இன்று நடத்திய பலப்பரீட்சையில் 1-0 என்ற அடிப்படையில் சுவிட்சர்லாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. சுவிட்சர்லாந்து அணி கடைசி 2 உலக கோப்பை தொடரிலும் ரவுண்ட் ஒப் 16 வரை வந்து தோல்வியை தழுவியது. இதனால் இம்முறை காலிறுதிக்கு தகுதி பெற அந்த அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இவ்விரு அணிகளும், முதல் முறையாக உலககோப்பை வரலாற்றில் இன்று மோதியிருந்த அதேவேளை,12 வது முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள சுவிட்சர்லாந்து அணி முதல் போட்டியில் இதுவரை தோற்றதில்லை என்ற வரலாற்றோடு களமிறங்கியிருந்த நிலையில்,அந்த வரலாற்றை தொடர்ந்தும் தக்கவைத்திருக்கிறது.
சுவிட்சர்லாந்து அணி கடைசி 2 உலக கோப்பை தொடரிலும் ரவுண்ட் ஒப் 16 வரை வந்து தோல்வியை தழுவியது. இதனால் இம்முறை காலிறுதிக்கு தகுதி பெற அந்த அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

உலக கோப்பையில் 1934, 1938 மற்றும் 1954ல் சுவிட்சர்லாந்து அணி கால் இறுதிவரை முன்னேறியது, இதில் 1954ம் ஆண்டின் உலக கோப்பையை சுவிட்சர்லாந்து தலைமை ஏற்று நடத்தியது. மேலும் சுவிட்சர்லாந்து கால்பந்து அணி 1924ல் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல்,1990 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தில் காலிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்த கேமரூன் அணி, உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமைக்கு உரிய நாடாகும்.அதேபோல 8 முறை உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஒரே அணியும் கேமரூன் தான்.
யூரோ 2020 போட்டியில் காலிறுதி வரை முன்னேறிய ஸ்விட்சர்லாந்து அணி கேமரூனுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தன்னுடைய அதீத திறமையுடன் விளையாடியது என்பதற்கு அப்பால்,நடைபெற்றுவரும் உலக கிண்ணத்தொடரில் பலமிக்க அணிகளில் தன்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறது.அதேபோல்,நடைபெறவுள்ள அடுத்தடுத்த போட்டிகளில் எதிரணிக்கு சுவிட்சர்லாந்து அணி சிம்ம சொப்பனமாக திகழக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
அதேபோல்,இன்றைய போட்டியில் கோல் அடித்த சுவிஸ் வீரர் பிரீல் எம்போலோ கோல் அடித்தும் அதனை கொண்டாடாமல் அமைதியாக நின்றது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.இதற்கு காரணம், அவர் பிறந்தது கேமரூன் நாட்டில். தனது சொந்த நாட்டிற்கு எதிராக கோல் அடித்ததால் அவர் சற்று சங்கடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
5 வயதாக இருந்தபோது பிரீல் எம்போலோவின் பெற்றோர் பிரிந்ததால், தனது தாயுடன் பிரான்சுக்கு குடிபெயர்ந்த எம்போலோ, இறுதியில் சுவிட்சர்லாந்தில் குடிபுகுந்தார்.
பிரீல் எம்போலோ முன்னதாக அளித்த பேட்டியொன்றில் , 'நான் இப்போது 60 அல்லது 70 சதவீதம் சுவிஸ் நாட்டில் இருக்கிறேன், நான் ஆபிரிக்கன் என்பதை விட சுவிஸ் காரன் என்பதே அதிகம்' என தெரிவித்துள்ளார்.