FIFA WORLDCUP QTAR 2022
உலகக்கோப்பை கால்பந்து போட்டி 05.12.2022
கத்தார் உலக கிண்ண தொடரின் நொக் அவுட் சுற்றுக்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பிரான்ஸ்-போலந்து மற்றும் இங்கிலாந்து-செனகல் ஆகிய அணிகள் நடத்திய சமரில் நடப்பு சம்பியன் பிரான்ஸ் அணி போலந்து அணியை 3:1 கோல்கள் வித்தியாசத்தில் வென்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றதுடன், 3 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி செனகலை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் பிரான்ஸ்- போலந்து அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடிய இரண்டாவது போட்டியாக நேற்றைய போட்டி அமைந்திருந்தது.நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஸ்பெய்னில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் 3 ஆம் இடத்தை தீர்மானிக்கும் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொண்டபோது 3 - 2 என்ற கோல்கள் கணக்கில் போலந்து வெற்றியீட்டி 3 ஆம் இடத்தைப் பெற்றிருந்தது.
இந்த இரண்டு அணிகளும் எல்லா வகையான கால்பந்தாட்டப் போட்டிகளிலும் சந்தித்துக்கொண்ட நேற்றைய போட்டியுடன் சேர்த்து 17 போட்டிகளில் பிரான்ஸ் 9 - 3 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதுடன், 5 போட்டிகள் வெற்றி-தோல்வியின்றி முடிவடைந்திருக்கிறது.
இரண்டாம் சுற்று அறிமுகமான பின்னர் அந்த சுற்றில் பிரான்ஸ் 7 ஆவது தடவையாகவும் போலந்து 3 ஆவது தடவையாகவும் விளையாடியுள்ளது.
அத்துடன் இந்த போட்டியின் 44 ஆவது நிமிடத்தில் பிரெஞ்சு வீரர் ஒலிவியர் ஜிரூட் (Olivier Giroud ) அடித்த கோல்
அவருடைய சர்வதேச போட்டிகளில் 52 ஆவது கோல் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்,பிரெஞ்சு அணியின் முன்னாள் வீரர் தியரி ஹென்றி 123 சர்வதேச போட்டிகளில் 51 கோல்களைப் அடித்து ஆகக்கூடுதலான சர்வதேச கோல்களைப் அடித்த பிரெஞ்சு வீரராக திகழ்ந்த நிலையில்,அச்சாதனையை தனது 116 ஆவது போட்டியில் ஒலிவியர் ஜிரூட் (Olivier Giroud ) முறியடித்தார்.
அதேபோல்,பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே, உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 60 ஆண்டுகளாக ஜாம்பாவன் பீலே வைத்திருந்த சாதனையை நேற்றைய போட்டியில் முறியடித்திருந்தார்.வேகமாக ஓடுபவர் ஹூசைன் போல்டா அல்லது பிரான்ஸ் கால்பந்து வீரர் எம்மாப்பேவா என விளையாட்டு உலகில் விவாதங்கள் எழுந்தது உண்டு. கால்பந்து மைதானத்தில் அவ்வளவு வேகமாக ஓடுபவர் எம்மாப்பே.
இந்நிலையில் நேற்றைய போலந்துடனான போட்டியில் இரண்டு கோல்களை அடித்து பிரான்ஸின் வெற்றிக்கு வித்திட்ட 23 வயதான கிலியன் எம்பாப்பே, நடப்பு உலகக் கோப்பையில் 5 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இரு உலகக் கோப்பையில் மட்டுமே விளையாடியுள்ள எம்மாப்பே, இதுவரை 9 கோல்கள் அடித்துள்ளார். 24 வயதுக்குள் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற 60 ஆண்டு கால பீலேவின் சாதனையை நேற்றைய போட்டியில் தகர்த்துள்ள கிலியன் எம்பாப்பே, கடந்த ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பதின்ம வயது இளைஞராக கோல் அடித்த பீலேவின் பெருமையை பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.2018 உலக கிண்ண தொடரில் 19 வயது இளைஞராக 4 கோல்களை எம்மாப்பே அடித்திருந்தார்.
உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை அவர் அடித்திருக்கும் கோல்களின் எண்ணிக்கை 9. லியோனல் மெஸ்ஸி 5 உலகக் கோப்பை போட்டிகளில் அடித்த கோல்களின் எண்ணிக்கைக்கு இது சமம். 5 உலகக் கோப்பை போட்டிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோல்களைவிட ஒன்று அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாரடோனா, நெய்மர், தியரி ஹென்றி போன்ற பெரிய நட்சத்திர வீரர்களைவிடவும் எம்பாப்பே அதிக கோல்களை அடித்துள்ளார். அத்துடன்,கத்தாரில் இதே வேகத்தில் ஆவர் ஆடினால் 24 வயதாவதற்கு முன்பே ஒரே உலகக் கோப்பை போட்டியில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெறக்கூடும் என காற்பந்து விமர்சகர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
1959-ஆம் ஆண்டில் பீலேயும் 1978-ஆம் ஆண்டில் கெம்பஸும், 2014-ஆம் ஆண்டில் ஜெம்ஸ் ரொட்ரிகோவும் 6 கோல்களை அடித்தே இதுவரை சாதனையாக இருக்கிறது. எம்பாப்வே இப்போதே 5 கோல்களை அடித்துவிட்டார். இன்னும் காலிறுதி உள்ளிட்ட அடுத்த கட்டப் போட்டிகள் இருக்கும் நிலையில்,எம்மாப்பேயின் சாதனைகளுக்காக காற்பந்து ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
2018-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் நொக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா அணியின் உலகக்கிண்ண கனவை தகர்த்தவர் இந்த எம்மாப்பே என்பதை கால்பந்து ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
ஜெர்மனியைச் சேர்ந்த குலோஸ் (Klose) உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 16 கோல்கள் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கொண்டுள்ளார். குறைந்தபட்சம் இன்னும் 3 உலகக் கோப்பைகளில் எம்மாப்பே விளையாட வாய்ப்பு உள்ள நிலையில், குலோஸிசின் சாதனையையும் அவர் முறியடிப்பார் என கால்பந்து ரசிகர்கள் நம்புகின்றனர்.
போலந்து அணியை பொறுத்தவரை 36 ஆண்டுகளுக்கு பிறகு நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. 1982 ஆம் ஆண்டிற்கு பிறகு நொக் அவுட் சுற்றில் போலந்து விளையாடியிருந்தது. உலகக்கோப்பையில் இரண்டாவது முறையாக பிரான்ஸ் அணியை எதிர்கொண்டிருந்த போலந்து, 1982 ல் 3வது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸை பந்தாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,பிரான்ஸ் அணி கத்தார் உலகக்கோப்பையில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் வகையில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எம்பாப்பேயின் புகைப்படத்தை பதிவிட்டு, காலியிறுதிக்கு முன்னேறிவிட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இம்முறை கத்தார் உலகக்கோப்பையில் தங்க காலணிக்கான போட்டியில் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே முன்னிலை வகிக்கிறார்.தங்க காலணி விருதை வெல்ல 5 வீரர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி, ஸ்பெயினின் அல்வரோ மொராட்டா, இங்கிலாந்தின் மார்கஸ் ராஷ்ஃபோர்ட், பிரான்ஸின் ஒலிவியர் கிரௌட், நெதர்லாந்தின் கோடி காக்போ ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்துள்ளனர்.அர்ஜென்டினா காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இதில் மெஸ்ஸி கோல்கள் அடித்து எம்பாப்பேவை முந்துவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.
இதேவேளை நேற்று நடைபெற்ற இன்னுமொரு ஆட்டத்தில் மோதிக்கொண்ட இங்கிலாந்து - செனகல் அணிகள் முதல் முறையாக உலகக் கோப்பையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பயிற்சியாளர் சிஸ்ஸே 2002 ம் ஆண்டு செனகல் அணியின் கேப்டனாக இருந்து பிறகு பயிற்சியாளராக மாறி அணியை இம்முறை நொக் அவுட் சுற்று வரை அழைத்துவந்திருந்தார்.
மூன்றாவது முறை உலகக் கோப்பையில் களமாடும் செனகல் 2002ம் ஆண்டு காலிறுதிக்கு முன்னேறியிருந்தது. அதேபோல்,16 வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் இங்கிலாந்து அணி நேற்றைய வெற்றியுடன் 10 முறை காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.
இதில் ஒரு விசேடம் என்னவென்றால், 5 பயிற்றுநர்கள் தலா இரண்டு தடவைகள் இங்கிலாந்தை கால் இறுதிக்கு வழிநடத்தி இருக்கிறார்கள்.
ரஷ்யாவில் 2018இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியிலும் கால் இறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து, இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக இம் முறையும் கால் இறுதிக்கு முன்னேறியிருக்கிறது.
இந்நிலையில்,இங்கிலாந்து உலகக் கிண்ண கால்பந்தாட்ட அணியின் முன்கள வீரர் ரஹீம் ஸ்டேர்லிங் (Raheem Sterling) கத்தாரிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.
அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்தபோது ஆயுதம் தாங்கிய குழுவினர் வீட்டிற்குள் புகுந்ததால் அவர் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில நேரங்களில் கால்பந்தாட்டம் முக்கியமாகப் படுவதில்லை. மாறாக குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிவரும் என இங்கிலாந்து பயிற்றுநர் கெரத் சவுத்கேட் தெரிவித்தார்.
சிரமமான இவ்வேளையில் அவர் குடும்பத்தாருடன் இருப்பதன் அவசியத்தை உணர்வதாகக் குறிப்பிட்ட சவுத்கேட், அடுத்த சில தினங்களுக்கு அவரது குடும்ப நிலை குறித்து கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறினார்.
அத்துடன் காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சம்பியன் பிரான்ஸ் அணியும் இங்கிலாந்து அணியும் மோதவிருக்கின்றன.
மேலும்,பிரேசில்-தென்கொரியா-மற்றும் ஜப்பான்-குரோஷியா அணிகளின் நொக் அவுட் சுற்று பற்றிய சுவாரசியமான தகவல்களுடன் நாளை சந்திக்கிறேன்.
நன்றி